
சேலத்தில் சுகாரத்துறை ஊழியரிடம் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த சுகாதாரத்துறை ஆய்வாளரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தில் சுகாதாரத்துறை ஊழியராக பணிபுரிபவர் பூங்கொடி. இவரிடம் சுகாதாரத்துறை ஆய்வாளராக பணிபுரியும் வெங்கடாச்சலமும் அவரது மனைவி யசோதாவும் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் வாங்கியுள்ளனர்.
ஆனால் பணம் வாங்கி நீண்ட நாட்கள் ஆகியும் நிலம் வாங்கிக் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பூங்கொடி வெங்கடாசலத்திடம் பலமுறை இதுகுறித்து கேட்டும் அவர் சரியான பதில் தரவில்லை.
இதையடுத்து, பூங்கொடி மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடாசலத்தை கைது செய்தனர்.
ஆனால் வெங்கடாசலத்தின் மனைவி யசோதா தலைமறைவகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.