"தேசமே முக்கியம் வேலை அல்ல" ஆசிரியை சபரிமாலா உண்ணாவிரதம்!

First Published Sep 8, 2017, 3:01 PM IST
Highlights
The Teacher Sabarimala protest


நீட் தேர்வுக்கு எதிராக தனது இடைநிலை ஆசிரியைப் பணியை ராஜினாமா செய்த சபரிமாலா, தனது வீட்டில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு பள்ளி ஆசிரியை சபரிமாலா, ராஜினாமா கடிதம் நேற்று கொடுத்தார்.

திண்டிவனம் அருகே ஜக்காம்பேட்டையைச் சேர்நத்வர் ஜெயகாந்தன். இவருடைய மனைவி சபரிமாலா, ஒலக்கூர்  வைரபுரம் ஊராட்சி பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நீட் தேர்வுக்கு எதிராக நேற்று பள்ளி முன்பு தர்ணா போராட்டம் நடத்தினார். பின்னர், அங்கு வந்த போலீசார், அனுமதியின்றி போராட்டம் நடத்தக் கூடாது என்று கூறியதை அடுத்து ஆசிரியர் சபரிமாலா அங்கிருந்து புறப்பட்டார். 

பள்ளி முன்பு அனுமதியின்றி தர்ணாவில் ஈடபட்டதால் துறை ரீதியாகவும் அவருக்கு எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில் ஆசிரியை சபரிமாலா, விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி  அலுவலகம் சென்று, தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். 

ஆசிரியை சபரிமாலா, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை தனது வீட்டு முன்பு நடத்தி வருகிறார்.

இந்தியா முழுவதும் ஒரே கல்வி என்பதை வலியுறுத்தி, ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகிறார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த முயன்றேன். ஆனால், நான் அரசு ஊழியர் என்பதைக் காரணம் காட்டி அனுமதி மறுத்தனர். அதனால் என் பணியை நான் ராஜினாமா செய்தேன். மாணவி அனிதாவின் மரணம், இன்றைய சூழலைப் பிரதிபலிக்கிறது. சுவாமி விவேகானந்தர் சொன்னதுபோல, கல்வி அனிதாவை தேடிச் சென்றிருந்தால் அவள் இறந்திருக்க மாட்டாள் என்றும் ஆசிரியை சபரிமாலா கூறியுள்ளார்.
 

click me!