
மதுரை தமுக்கம் மைதானம் மற்றும் தல்லாகுளம் பகுதியில் போராட்டம் நடத்திய 81 பேரை, சிறையில் அடைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ படிப்பில் சேர இயலாத விரக்தியில் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா கடந்த சில தினங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் இந்த தற்கொலை, தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.
அனிதாவின் இறப்புக்கு நீதி கேட்டு, நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள், அமைப்புகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மதுரை தமுக்கம் மைதானத்தில் நீட் தேர்வுக்கு எதிராகவும், மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் போராட்டம் நடத்தினர். அதேபோல் தல்லாகுளம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், தமுக்கம் மைதானம் மற்றும் தல்லாகுளம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு, மாலை விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் தமுக்கம் மைதானம் மற்றும் தல்லாகுளம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.