
போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை மீறி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இன்று இரண்டாவதாக நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பழைய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும், 7 வது சம்பள கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்தது.
இதையடுத்து அரசு அதிகாரிகள் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர், நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், நேற்று முதல் போராட்டம் துவங்கியது.
ஆனால், தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை இடைக்காலத் தடை விதித்தது.
உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்கும் வகையில் அரசு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என தலைமை செயலரும் அறிவுறுத்தியிருத்தி இருந்தார்.
ஆனால் இதற்கொல்லாம் அஞ்சாமல், அன்று இரண்டாவது நாளாக ஐகோர்ட் தடையை மீறி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பணிக்கு செல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பும் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை ரயில் நிலையம் முன்பு பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மதுரை, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது..