செம்மரம் கடத்தலை தடுக்க தமிழக அரசும் ஒத்துழைக்க வேண்டும் – ஆந்திர வன அதிகாரி வேண்டுகோள்...

First Published Mar 10, 2017, 5:38 PM IST
Highlights
The Tamil Nadu government should cooperate to prevent smuggling cemmaram - AP wildlife official request


செம்மரம் கடத்துவதை தடுக்க தமிழக அரசும் ஒத்துழைக்க வேண்டும் என ஆந்திர வன அதிகாரி மூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம், லங்கமல்லா வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி கடத்துவதாக போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.  அப்போது டி.வி பள்ளி கிராமத்தை ஒட்டியுள்ள வனிபண்டா ஜி.வி. சத்திரம் அருகே உள்ள வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டிக்கொண்டிருந்த தமிழகத்தை சேர்ந்த 15 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அவர்கள் அளித்த தகவலின் பேரில் மேலும் பலரை போலீசாரும் வனத்துறை அதிகாரிகளும் கைது செய்தனர். அவர்களிண்டமிருந்து  7 டன் எடையுள்ள 285 செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

செம்மரம் கடத்தல் பிரிவு போலீசார் செம்மரம் கடத்தியதாக நேற்றுமட்டும்  177  பேரை கைது செய்துள்ளனர்.  

இந்நிலையில், ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம் போதட்டூரில் வன அதிகாரி மூர்த்தி செய்தியாளர்களை சந்த்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

செம்மரம் கடத்தியாதாக மேலும் 35  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துப்பாக்கியை பயன்படுத்தாமல் 177 பேர் போலேசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செம்மரம் கடத்தலை தடுக்க தமிழக அரசும் ஒத்துழைக்க வேண்டும்.

செம்மரம் கடத்தலில் இளைஞர்கள் பலிகடா ஆக்கப்படுகின்றனர். 

செம்மர கடத்தல் தொடர்பாக 2014- 2015 ல் 380  வழக்குகள் பதிவாகி உள்ளன.

2016 ஆம் ஆண்டில் 155 வழக்குகள் பதிவாகி உள்ளன.

2017 ஆம் ஆண்டில் செம்மரம் கடத்தியதாக 101  வழக்குகள் பதிவாகி உள்ளன.

செம்மர கடத்தலில் மூளையாக செயல்படுவர்களை கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

click me!