ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அதிகாரியாக பத்மஜா தேவி நியமனம்

First Published Mar 10, 2017, 4:43 PM IST
Highlights
padmajadevi appointed as r.k nagar election officer


ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலாராக பத்மஜாதேவி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு காலியாக உள்ள ஆர். கே.நகர் இடைத்தேர்தல் இப்பவோ அப்பவோ என இழுக்கடிக்கப்பட்டு வந்தது. தற்போது ஏப்ரல் 12 ஆம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் ஒவ்வொரு கட்சிகளும் கங்கணம் கட்டிக்கொட்டு களத்தில் இறங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை இணை இயக்குனராக பணியாற்றி வருபவர் பத்மஜாதேவி, ஆர்.கே.நகரில் தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வாக்காளர் பதிவு அலுவராக தண்டையார் பேட்டை மண்டல அலுவலர் விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தண்டையார் பேட்டை வட்டாட்சியராக பணிபுரிந்து வரும் சேகர் தேர்தல் உதவி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். சமூக நலத்திட்ட பாதுகாப்பு தனி வட்டாட்சியர் மதன்பிரபு தேர்தல் உதவி அலுவலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்திட கட்சிகளும் மக்களும்  ஒத்துழைக்க வேண்டும் என சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆணையர் கார்த்திகேயன் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

click me!