
செயின் பறிப்பு, நகை கொள்ளை உள்ளிட்ட 18 வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து 56 சவரன் தங்க நகைகளும் இரண்டு திருட்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் அசோக் நகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, மாம்பலம், வடபழனி, விருகம்பாக்கம், வளசரவாக்கம், ஆகிய இடங்களில் செயின் பறிப்பு மற்றும் திருட்டுக்கள் அதிகம் நடைபெற்று வந்தன.
இதையடுத்து சென்னை கமிஷ்னர் ஜார்ஜ் உத்தரவின் பேரில், சென்னை குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.
இந்நிலையில், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் மொத்தம் 18 வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் சரவணன், ரியாஸ் ஆகிய இரண்டு பேரையும் போலீசார் இன்று கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 56 சரவன் தங்க நகைகள் மற்றும் காசுகளும் இரண்டு இருசக்கர வாகனங்களும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து அவர்களை குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்திய போலீசார் நீதிபதி உத்தரவின் பேரில் மத்திய சிறையில் அடைத்தனர்.