
ஆசிரியர் தகுதி தேர்வை பொருத்தவரையில் தற்போது வரை பல பிரச்சனைகள் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், 2012, 2013, 2014 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது
ஆன் லைன் மூலம் சரிபார்த்தல்
தேர்ச்சி பட்டியலில் இடம் பெற்றவர்கள் அதில் ஏதாவது , பிழை இருந்தால், அதனை ஆன்லைன் மூலம் வருகிற 20 ஆம் தேதிக்குள், தாங்களாகவே மாற்றி கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஆதாவது , அரசு பள்ளிகளில் 286 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 623 பின்னடைவு பணியிடங்கள் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் உள்ள 202 பட்டதாரி ஆசிரியர் தேவைப்படும் தருவாயில், தற்போது வெளியான தகுதி பெற்றவர்கள் பட்டியலிலிருந்து நியமனம் செய்ய உள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது.
தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள www.trb.tn.nic.in என்ற இணையத்தை பார்த்துக்கொள்ளலாம்