ஈஷா யோகா மையத்தில் குளத்தில் மூழ்கி மாணவர் பலி

 
Published : Mar 10, 2017, 03:21 PM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
ஈஷா யோகா மையத்தில் குளத்தில் மூழ்கி மாணவர் பலி

சுருக்கம்

Isha Yoga Center student who died in the incident

ஈஷா யோகா மையத்தில்  மாணவர்  உயிரிழந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

கோவை மாவட்டம்  வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது  ஈஷா யோகா மையம் . சமீபத்தில் கூட  பாரத பிரதமர்  மோடி , மிக உயரிய அடியில் உருவான சிவன் சிலையை அங்கு  திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

ஈஷா யோகா மையத்தில், பாதரசம்  மற்றும் மெர்குறி போன்றவற்றால் உருவாக்கப்பட்ட சிலைகள்   அடங்கிய சூரிய குண்டத்தில் நீராடும் போது 21 வயது  மதிக்கத்தக்க மாணவர் ரமேஷ் என்பவர்  உயிரிழந்தார்.

திருவண்ணாமலை  மாவட்டம், கோட்டை மேடு  பகுதியை  சேர்ந்த மன்னார் சாமி என்பவரின் மகன் ரமேஷ். இவர் வேலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியான ஜி டெக் கல்லூரியில் மூன்றாமாண்டு  சிவில் என்ஜினியர் படிப்பை படித்து வந்தார்.

இந்நிலையில், ரமேஷ் சக மாணவர்களோடு ஊட்டி செல்ல திட்டமிட்டு , செல்லும் வழியில்  வெள்ளியங்கிரி  செல்ல முடிவெடுத்துள்ளனர். பின்னர் அங்கிருந்த சூரிய குண்டத்தில் அனைவரும்  நீராடி  உள்ளனர் . சூரிய குண்டத்தில் உள்ள நீரோ  அதிக குளிமையாக  இருக்கும் பட்சத்தில்,  ரமேசுக்கு  வலிப்பு  ஏற்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது.

உடனடியாக   ரமேசுக்கு  முதலுதவி செய்து , மேல் சிகிச்சைக்காக  கோவை அரசு மருத்துவமனைக்கு  கொண்டு செல்லும் போது  ரமேஷ்  பரிதாபமாக  உயிரிழந்தார் . தற்போது அவருடைய  உடல்  பிரேத  பரிசோதனைகாக  கோவை  அரசு  மருத்துவமனையில்  வைக்கபட்டுள்ளது .

இது குறித்து போலீசார்  வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்

PREV
click me!

Recommended Stories

டிடிவி, ஓபிஎஸ் உடன் கூட்டணி பேச்சு., அதிமுகவில் இருந்து பலரும் தவெக வருவார்கள்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
Tamil News Live today 25 December 2025: பார்வதிக்கு விஜயா செய்த துரோகம்... முத்துவின் செயலால் முறிந்த நட்பு - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்