மதியம் 12 மணி முதல் மாலை 3 வரை வெளியில் வர வேண்டாம்..! தமிழக அரசு எச்சரிக்கை.! என்ன காரணம் தெரியுமா.?

By Ajmal Khan  |  First Published Mar 15, 2023, 9:07 AM IST

அதீத வெப்பத்தால் பக்கவாதம் ஏற்படுபவருக்கு தேவையான சிகிச்சைகள் வழங்க மருத்துவ கட்டமைப்புகளை தயார் நிலையில் வைக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வாகத்திற்கும் சுகாதாரத் துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 


தொடங்குகிறது கோடை காலம்

நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் தற்போதே 37 டிகிரிக்கும் மேல் வெயிலானது வாட்டி வதைக்கிறது. இந்தநிலையில் வரும நாட்களில் வெயிலின் தாக்கத் அதிகபட்சமாக 45 டிகிரியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வெயில் காலத்தை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து தமிழகத்தில்  "வெப்ப அலை 2023"  எதிர்கொள்ள சுகாதாரத் துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

தேசிய நோய்த்தடுப்பு மையம் மற்றும் ஒன்றிய சுகாதாரத்துறை வலியுறுத்தல் படி  வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மாவட்ட துணை சுகாதார இயக்குநர்களுக்கும் தமிழ்நாடு  பொது சுகாதாரத்துறை அனுப்பியுள்ளது. அதில், அதீத வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதம்,  இறப்பு  ஆகியவை குறித்த பட்டியல்  ஒவ்வொரு மருத்துவமனையிலும்  பராமரிக்கப்பட வேண்டும். 

சென்னைக்கு புறப்பட்ட பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதியினர்… முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசவுள்ளதாக தகவல்!!

தயார் நிலையில் மருத்துவமனை

அனைத்து மருத்துவ அலுவலர்களும் வெப்பத்தால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை கண்டறிவதில் திறன் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதீத வெப்பத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்க வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் ORS பாக்கெட்டுகள்,  ஐவி திரவங்கள், ஐஸ் பேக்குகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் போதுமான அளவு கையிருப்பில் வைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தேவைக்கு அதிகமாக குடிநீர்,  குளிரூட்டும் கருவிகள் , ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஐஸ் பாக்கெட்டுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். அதீத வெப்பத்தால் பக்கவாதம் ஏற்படுபவருக்கு தேவையான சிகிச்சைகள் உடனடியாக தரப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார வாரியத்துடன் ஆலோசனை நடத்தி குளிரூட்டும் கருவிகள் மற்றும் இதர சாதனங்களுக்கு தடையில்லா மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட சுகாதார துணை இயக்குநர்களுக்கான உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியில் வர வேண்டாம்

இதைத்தவிர பொதுமக்கள் அதிக நீர் அருந்துதல்,  வெயிலில் செல்லாமல் தற்காத்துக் கொள்ளுதல் அவசியம் எனவும், ஒருவேளை வெயிலில் செல்ல வேண்டியிருந்தால் குடை, உடலை முழுதாய் மறைக்கும் பருத்தி ஆடைகள் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும் எனவும் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் குழந்தைகள், வயதானோர்,  கப்பிணிகள் முடிந்தவரை வீடுகளுக்குள்ளே இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் மாலை 3 வரை சூரிய வெளியில் வர வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது. வெயில் காலங்களில் பழங்களை அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டுமெனவும்,  உடல் சூடு, தோலில் எரிச்சல், வாந்தி,  மயக்கம், தலைவலி உள்ளிட்டவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும் எனவும் அந்த வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .

இதையும் படியுங்கள்

அதிகரிக்கும் இன்புளுயன்சா காய்ச்சல்..! அறிகுறிகள் என்ன.? ஆர்டிபிசிஆர் சோதனை யார் செய்வேண்டும்.? அரசு அறிவிப்பு

click me!