அதிகரிக்கும் இன்புளுயன்சா காய்ச்சல்..! அறிகுறிகள் என்ன.? ஆர்டிபிசிஆர் சோதனை யார் செய்வேண்டும்.? அரசு அறிவிப்பு

By Ajmal Khan  |  First Published Mar 15, 2023, 8:22 AM IST

மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தால் மட்டுமே இன்புளுயன்சவுக்கான RT PCR பரிசோதனை செய்ய வேண்டும் என  பொது சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
 


அதிகரிக்கும் காய்ச்சல்

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வைரஸ் காய்ச்சல் அதிகளவு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஏராளமானோர் மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் தற்போது அதிகமாக பரவி வரும் இன்புளுயன்சா காய்ச்சல் சிகிச்சைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி ப்ளு காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

A வகை : லேசான காய்ச்சல்,  இருமல்

B வகை :   1. தீவிர காய்ச்சல், அதிக இருமல்,

2. தீவிர காய்ச்சலுடன் உள்ள குழந்தைகள், கர்ப்பிணிகள், 65 வயதுக்கு மேற்பட்டோர்,  இணைநோய்கள் இருப்போர், உள்ளிட்ட  A, B பிரிவினர் யாருக்குமே இன்புளுயன்சாவிற்கான பரிசோதனையோ, மருத்துவமனையில் அனுமதிக்கவோ தேவையில்லை  என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் வீட்டுத்தனிமைப்படுத்தலே போதுமானது எனவும் கூறப்பட்டுள்ளது. .

ஆர்டிபிசிஆர் சோதனை யாருக்கு.?

C வகை : தீவிர காய்ச்சல், தொண்டை வலி ஆகியற்றோடு மூச்சுவிடுவதில் சிரமம், நெஞ்சுவலி,  இரத்த அழுத்த குறைவு ஆகியவை இருந்தாலோ குழந்தைகளுக்கு இடைவிடாத தொடர் காய்ச்சல், உணவு உண்ணாமை, மூச்சுவிடுவதில் சிரமம் ஆகியவை இருந்தாலோ இந்த பிரிவினருக்கு இன்புளுயன்சாவை கண்டறிவதற்கான RT PCR பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டும், மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளிப்பட வேண்டும். வீட்டுத்தனிமைப்படுத்தலில் இருப்போர் 24 மணி நேரமும் 104,108 எண்களில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 

தடுப்பூசி கட்டாயம்

மருத்துவமனைகளை பொறுத்தவரை தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் ஆய்வகங்களில் பணி புரிவோர் கட்டாயம் முகக் கவசமும் மற்ற அனைவரும் மூன்றடுக்கு முகக்கவசமும் அணிந்திருக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதைத்தவிர மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் ப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும்,கர்ப்பிணிகள்  மற்றும் இணைநோயுள்ளோரும் ப்ளூ தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அந்த வழிகாட்டு நெறிமுறையில் உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

இவர ஞாபகம் இருக்கா.. பட்டப்பகலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் ஸ்வேதா கழுத்தை அறுத்து கொன்ற காதலன் செய்த காரியம்
 

click me!