திண்டிவனத்தில் தடையை மீறிய எச்.ராஜா! மடக்கிப் பிடித்து கைது செய்த போலீஸ்!

By SG Balan  |  First Published Mar 14, 2023, 10:51 PM IST

பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்வதற்கான தடையை மீறிச் சென்ற பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவை காவல்துறை சாலையில் மடக்கிப் பிடித்தது.


பாஜக மூத்த தலைவர் எச். ராஜா திண்டிவனம் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்துகொண்டிருந்தார். அவர் பெரம்பலூர், திருமாந்துறை சுங்கச்சாவடியை அடைந்தபோது காவல்துறையினர் வழிமறித்துப் பிடித்து கைது செய்தனர்.

பாஜகவின் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் திண்டிவனத்தில் மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியின் மூத்த தலைவர் ஹெச். ராஜா காரைக்குடியில் இருந்து காரில் வந்தார். கடலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே கடலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் அவரைப் பிடிக்கத் தயாராக இருந்தனர்.

Tap to resize

Latest Videos

Jeet Adani: அதானி மகன் ஜீத் திருமணம்! வைர வியாபாரி மகள் திவாவுடன் நிச்சயதார்த்தம் முடிந்தது

கார் சுங்கச்சாவடியை நெருங்கியதும் அதனைத் தடுத்து நிறுத்தினர். பொதுக்கூட்டத்துக்குச் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தினர். திண்டிவனத்தில் அனுமதி பெறாமல் நடைபெறும் கூட்டத்துக்குச் சென்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று கூறினார். ஆனால் எச். ராஜா காவல்துறையின் பேச்சைக் கேட்காமல் அவர்களுடன் வாக்குவாதம் செய்தார். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் ராஜாவை கைது செய்தனர்.

எச். ராஜாவுடன் வந்த நூற்றுக்கணக்கான பாஜக தொண்டர்களையும் கைது செய்தனர். ராமநத்தம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

மோதலைத் தூண்டும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறுவதற்குப் பெயர் பெற்றவர் என்பதால், அவர் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கக் கூடாது என்று தமிழக அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவை மதிக்காமல் மீறிச் சென்று கூட்டத்தில் கலந்துகொள்ள முயன்றதால் காவல்துறை அவரைக் கைது செய்தது.

உலகின் மிகவும் மாசுபட்ட 50 நகரங்களில் 39 இந்தியாவில் உள்ளவை: ஆய்வில் தகவல்

click me!