புக்கர் பரிசு நெடும்பட்டியலில் எழுத்தாளர் பெருமாள் முருகனின் 'பூக்குழி' நாவல்

By SG Balan  |  First Published Mar 14, 2023, 8:25 PM IST

எழுத்தாளர் பெருமாள் முருகன் 2013ஆம் ஆண்டு தமிழில் வெளியான 'பூக்குழி' நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு Pyre கடந்த ஆண்டு பிரிட்டனில் வெளியானது.


மாதொருபாகன் நாவல் மூலம் பிரபலமான எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய பூக்குழி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு புக்கர் பரிசுக்கான நெடும்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

ஒன்று புக்கர் பரிசு உலக அளவில் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு வழங்கப்படும் முக்கிய பரிசுகளில் ஒன்றாகும். வெவ்வேறு உலக மொழிகளில் எழுதப்பட்டு பிரிட்டனிலும் அயர்லாந்திலும் ஆங்கிலத்தில் வெளியாகும் நாவல் அல்லது சிறுகதைத் தொகுப்புக்கு புக்கர் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. வெற்றி பெறும் படைப்புக்கு 50 ஆயிரம் பவுண்டு பரிசாக அளிக்கப்படும். அந்தத் தொகையை நூலாசிரியருக்கும் மொழிபெயர்ப்பாளருக்கும் சமமாகப் பகிர்ந்துகொள்வார்கள்.

Tap to resize

Latest Videos

2023ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசுக்கான போட்டியில் பெருமாள்முருகன் எழுதிய தமிழ் நாவலான 'பூக்குழி' நாவலும் உள்ளது. புக்கர் பரிசுக்கு பரிசீலிக்கப்படும் படைப்புகளின் நெடும்பட்டியலில் பூக்குழி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான Pyre இடம்பெற்றிருக்கிறது.

Reddmatter: உலகையே மாற்றி அமைக்கும் ரெட் மேட்டர் சூப்பர் கண்டக்டர் கண்டுபிடிப்பு!

We are delighted to announce the longlist. Congratulations to all the authors and translators.

Find out more about each of the books here: https://t.co/U4KH7EkhZj pic.twitter.com/OTgnrZKYk9

— The Booker Prizes (@TheBookerPrizes)

சாதிவெறியினால் நடக்கும் ஆவணக்கொலைகளை பற்றி பேசும் இந்த நாவல் கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியாகி 2013ஆம் ஆண்டு காலச்சுவடு பதிப்பகத்தால் புத்தகமாக வெளியிடப்பட்டது. பின்னர் 2016ஆம் ஆண்டு அனிருந்தன் வாசுதேவன் இந்த நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, பென்குயின் பதிப்பகம் வெளியிட்டது. இந்த ஆங்கில மொழிபெயர்ப்பு கடந்த 2022ஆம் ஆண்டு பிரிட்டனில் புஷ்கின் பிரஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

பெருமாள்முருகனின் புகழ்பெற்ற 'மாதொருபாகன்' நாவலை 'One Part Woman' என்ற தலைப்பில் தமிழாக்கம் செய்த அனிருத்தன் வாசுதேவன்தான் 'பூக்குழி' நாவலையும் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

11 மொழிகளில் எழுதப்பட்ட 13 படைப்புகள் இந்த ஆண்டு புக்கர் பரிசுக்கான பரிந்துரையில் உள்ளன. இதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 புத்தகங்கள் கொண்ட குறும்பட்டியல் லண்டன் புத்தகக் கண்காட்சியில் ஏப்ரல் 18ஆம் தேதி வெளியிடப்படும். அந்த ஆறு நூல்களில் இருந்து பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நூல் மே 23ஆம் தேதி லண்டனில் நடக்கும் புக்கர் பரிசு வழங்கும் விழாவில் அறிவிக்கப்படும். 

முதல் முறையாக தமிழ் படைப்பு ஒன்று இந்தப் பரிசுக்காக பரிசீலிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு கீதாஞ்சலி ஶ்ரீ எழுதி டெய்சி ராக்வெல் மொழிபெயர்த்த இந்தி நாவலான Tomb of Sand புக்கர் பரிசைப் பெற்றது நினைவூட்டத்தக்கது.

ரயிலில் பெண் பயணியின் தலையில் சிறுநீர் கழித்த டிக்கெட் பரிசோதகர் கைது

click me!