கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அருகே காட்டு யானைகளுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞரை யானை மிதித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பாரூர் அருகே உள்ள காட்டு கொல்லை கிராமத்தைச் சேர்ந்த எல்லப்பன் என்பவரது மகன் ராம்குமார் (வயது 27). இவர் இன்று காலை மோட்டுப்பட்டி அருகே உள்ள மலை அடிவாரத்தில் காலை இயற்கை உபாதைக் கழிக்க சென்றுள்ளார். அப்போது இரண்டு காட்டு யானைகள் அப்பகுதிக்கு வந்துள்ளன.
சாலையோரத்தில் கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் தமிழக இளைஞர்கள்; அதிர்ச்சி சம்பவம்
undefined
காட்டு யானைகளை பார்த்த ராம்குமார், அதனுடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார். அப்போது யானை ஆக்ரோஷமான காட்டு யானை மிதித்து ராம்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் யானை தற்போது அகரம் அருகே உள்ள மறுதேறி ஏரியில் உள்ளது. யானையை விரட்டும் பணியில் பாரூர் காவல் துறையினரும், வனத்துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சையில் கோர விபத்து; பொதுத்தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவி உள்பட 2 பேர் பலி
ஈரோடு மாவட்டம், தமிழக எல்லையான தளவாடி பகுதியில் உலாவந்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் திடீரென மிக அருகில் காட்டு யானையை பார்த்ததும் செய்வதறியாது திகைத்துப் போனார். அப்போது நிலை தடுமாறி இருசக்கர வாகனத்துடன் சாலையின் அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்தார்.
உடனடியாக அருகில் இருந்த சக வாகன ஓட்டிகள் வாகனத்தில் ஒலி எழுப்பி யானையின் கவனத்தை திசை திருப்பினர். பின்னர் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த நபரை மீட்டு ஆசுவாசப்படுத்தினர்.