கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணம் செய்த பெண் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த நாகமரத்துபள்ளம் அருகே கீழ்குப்பம் கிராமத்தை சேர்ந்த சென்னம்மாள் (வயது 45) என்பவர் அவரது மருமகள் அல்லி (வயது 35) மற்றும் குழந்தை சபரிவாசன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் கடத்தூரில் உள்ள தனது மகளை பார்க்க சென்று கொண்டிருந்தனர்.
அப்போது வீராட்சிகுப்பம் நாகமரத்துபள்ளம் அருகே எதிரே வந்த அரசு பேருந்துக்கு வழி விடுவதற்காக இடது பக்கமாக தார் சாலையில் இறங்கி மீண்டும் தார் சாலையில் ஏற முற்பட்டுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த சென்னம்மாள் நிலை தடுமாறி தார் சாலையில் விழுந்துள்ளார். அப்போது எதிரே வந்த அரசு பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
எடப்பாடியின் தாத்தா ஆரம்பித்த கட்டியல்ல அதிமுக - ஓ.பி.எஸ். அதிரடி
உயிரிழந்தவரின் உடல் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மருமகள் அல்லி மற்றும் குழந்தை சபரி வாசன் இருவருக்கும் ஏதும் காயம் இல்லை. இச்சம்பவம் தொடர்பாக கல்லாவி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தங்கைக்கு காதல் தொல்லை கொடுத்த மாணவனின் கழுத்தை அறுத்த சக மாணவன்