வேலம்பட்டி கிராமத்தில் திமுக பேரூராட்சி கவுன்சிலர் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்குதலால் உயிரிழந்த ராணுவ வீரர் பிரபுவின் மரணத்திற்கு நீதி கேட்டு பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டி, எம்.ஜி.ஆர். பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி (வயது 50). திமுகவைச் சேர்ந்த இவர் பேரூராட்சி கவுன்சிலராக இருந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் 30, அவரின் தம்பி பிரபு 29, இருவரும் இராணுவத்தில் பணிபுரிந்து வந்தனர். இதில் பிரபாகரனின் மனைவி பிரியா அவரது வீட்டின் முன்பு இருந்த சின்டெக்ஸ் தொட்டியின் அருகில் துணி துவைத்துள்ளார். இதை கவுன்சிலர் சின்னசாமி கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் வாய் தகராறு ஏற்பட்டு அங்கிலிருந்தவர்கள் சமரசம் செய்து அனுப்பியுள்ளனர். இருப்பினும் ஆத்திரத்தில் இருந்த திமுக கவுன்சிலர் சின்னசாமி தனது உறவினர்களுடன் சென்று இராணுவத்தில் பணிபுரியும் பிரபாகரன் மற்றும் அவரது தம்பி பிரபு இருவரையும் கற்கள் மற்றும் ஆயுதங்களால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ராணுவ வீரர் பிரபு பலத்த காயமடைந்து ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் மாலை பிரபு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகராறு காரணமாக ஆயுதப்படை காவலர் குருசூர்யமூர்த்தி, மணிகண்டன், வேடியப்பன், மாதையன், ராஜபாண்டி, குணாநிதி ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். தலை மறைவாக இருந்த திமுக கவுன்சிலர் சின்னசாமி, புலிப்பாண்டி, காளியப்பன் ஆகிய மூன்று பேர் தனிப்படை அமைக்கப்பட்டு கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் காவல் துறையினர் கைது செய்து கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.
ராணுவ வீரர் கொலையில் அரசியல் நோக்கம் இல்லை - வதந்தி பரப்புபவர்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக கவுன்சிலரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட ராணுவ வீரர் பிரபுவுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில், வேலம்பட்டி பேருந்து நிலையத்தில் கவுன்சிலர் தாக்குதலால் பலியான பிரபுவின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும். அவரது மனைவிக்கு அரசு பணி வழங்க வேண்டும். மேலும் அவர்கள் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை கிடைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலூரில் காட்டு யானை தாக்கி முதியவர் படுகாயம்