ரேஷன் கார்டில் பெயர்,முகவரி மாற்றம் செய்யனுமா.? புதிய குடும்ப அட்டை வாங்கனுமா.? தமிழக அரசின் புதிய அறிவிப்பு

By Ajmal Khan  |  First Published Sep 7, 2022, 1:43 PM IST

சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் வருகிற 10 ஆம் தேதி குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 


குடும்ப அட்டையில் திருத்தம் செய்ய வாய்ப்பு

குடும்ப அட்டைகளில் பெயர் நீக்கம் மற்றும் பெயர் சேர்த்தல் பணிகளுக்காக நீண்ட நாட்கள் காத்திருக்காமர் ஒரே நாளில் அணைத்து பணிகளையும் முடித்திடும் வகையில் தமிழக அரசு சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது. இது தொடர்பாக  உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது விநியோகத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, செப்டம்பர்-2022 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் 10.09.2022 அன்று காலை 10.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது. குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை / நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும். 

Tap to resize

Latest Videos

அதிமுகவில் இணைகிறார்களா 10 திமுக எம்எல்ஏக்கள்...? ஸ்டாலினை அலறவிட்ட இபிஎஸ்

மூத்த குடிமக்களுக்கு அங்கீகார சான்று

மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்தகுடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்தச் சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்

பாரதியார் பல்கலை வளாகத்திற்குள் புகுந்த ஒற்றை யானை...! காவலாளி அறைக்கு சென்றதால் அலறி அடித்து ஓடிய வாட்ச்மேன்

 

click me!