தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளுக்கு மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 109 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில், 24 ஆயிரத்து 341 முதுகலை படிப்புகளுக்கான இடங்கள் உள்ளன. இந்நிலையில் இன்று முதல் முதுகலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. மாணவர்கள் http://tngasapg.in என்ற இணையதளம் வாயிலாக வரும் 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க:நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.. மாணவர்கள் மதிப்பெண்களை தெரிந்துக் கொள்ளவது எப்படி..? முழு விவரம்
undefined
எனவே மாணவர்கள் இன்று முதல் செப்டம்பர் 16 ஆம் தேதி வரை அரசு கல்லூரிகளில் முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். அந்தந்த கல்லூரி மூலம் வரும் 20ம் தேதி விண்ணப்ப பதிவு செய்பவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:தேர்வர்களே அலர்ட்.. தமிழக அரசின் 155 விரிவுரையாளர் காலி பணியிடங்கள்.. TRB வெளியிட்ட அறிவிப்பு..
அதனை தொடர்ந்து கல்லூரிகளில் முதுகலை படிப்பில் மாணவர் சேர்க்கை வரும் 21ஆம் தேதி முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் இளங்கலை படிப்புக்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கை முடிந்து, ஜூலை இறுதியில் வகுப்புகள் தொடங்கின. இந்த நிலையில் தற்போது முதுநிலை படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.