கிராம சபை கூட்டத்திற்கு அனுமதி...! என்ன, என்ன விஷயங்கள் குறித்து விவாதிக்கலாம் பட்டியல் வெளியீடு

By Ajmal KhanFirst Published Aug 9, 2022, 8:25 AM IST
Highlights

ஆகஸ்ட் 15ஆம் தேதி கிராம சபை கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

கிராம சபை கூட்டத்திற்கு அனுமதி

கிராம சபை கூட்டம், இந்தியக் குடியரசு நாள் (26, ஜனவரி), தொழிலாளர் நாள் (1, மே), சுதந்திர தின நாள், (15, ஆகஸ்டு) காந்தி ஜெயந்தி (2, அக்டோபர்), உலக நீர் நாள் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி நாள் (நவம்பர் 1) ஆகிய ஆறு சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கூட்டப்படுகிறது. இந்தநிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகள் கிராம சபை கூட்டம் கூட்டவில்லை. இதனையடுத்து தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதன் காரணமாக சுதந்திர தினத்தையொட்டி கிராம சபை கூட்டத்தை கூட்ட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அந்த சுற்றறிக்கையில்,  சுதந்திர தினமான 15.08.2022 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி சுதந்திர தினமான 15.08.2022 அன்று காலை 11.00 மணி அளவில் நடத்த வேண்டும். அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு குறைவெண் வரம்பின்படி உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

மின்சார வாரியத்தை தனியார் மயமாக்க பாஜக அரசு முயற்சி… அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு!!

1. கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது விவாதித்தல்

2. குடிநீரைச் சிக்கனமாக பயன்படுத்துதல்:

அனைவருக்கும் குடிநீர் கிடைக்கப்பெறும் வாக்கயில் குடிநீரை அனைத்து ருக்கிராமங்களுக்கும் முறையாக விநியோகம் செய்தல் நீர் தேக்கத் தொட்டிகள் மற்றும் பொதுக்குழாய்கள் அருகில் குளித்தக்ட துணி துவைத்தல். பாத்திரம் கழுவதல் போன்ற செயல்களை தவிர்த்தல், குடிநீரை சுத்தமான பாத்திரங்கரில் முடி வைத்து உபயோகித்தல் போன்றவற்றை மேற்கொள்ளுதல் மற்றும் குடிநீர் சிக்கனத்தை உறுதிசெய்தல்

3. கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்,

ஊரகப் பகுதிகளில் ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துதல் தொடர்பாக விழிப்புணர்டைன் கூடிய முண்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுவதை உறுதி செய்தல் அனைத்து குக்கிக்கிராமங்களிலும் துப்புரவு பணி முழுமையாக மேற்கொள்ளுதல், மேல் நிலை நீர் தேக்கத் தொட்டிகள், தரை மட்ட நீர் தேக்கத் தொட்டிகள் மாதல் இருமுறை சுத்தம் செய்தல், (பிரதிமாதம் 5ம் தேதி மற்றும் 20ம் தேதி) தகுந்த அளவு குளோரின் கலந்து குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல். 
டெங்கு காய்ச்சவைப் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாவதை தடுத்தல். தெளிந்த நீர்த்தொட்டி, பயன்பாடற்ற பானைகள், குளிர்சாதன பெட்டி பின்புறம், பழைய டயர், நேங்காய் பட்டைகள். செடிகள் வரும் தொட்டிகள். புதிய கட்டுமான பணிகள் நடக்குமிடங்கள் மற்றும் இதர தண்ணீர் தேங்கும் இடங்களில் நண்ணீர் தேங்காமலும், அவற்றை முறையாக அகற்றியும். கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளதல்

4. அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி :

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆம் ஆண்டினை கொண்டாடிடும் வகையில் 'சுதந்திரத் திருநாள் அமுதப்பெருவிழா அனைத்து ஊராட்சிகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை மேலும், அனைவரின் மனதிலும் தேசம் சுதந்திரம் அடைத்தகள் பெருமிதத்தை உணரும் வகையில் "அனைத்து வீடுகளிலும் தேரியக் கொடி" எனும் மாபெரும் இயக்கத்தினை இந்திய அரசு துவக்கியுள்ளது. இதன்படி, ஆகஸ்ட் 13 ஆம் நேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரையில் தேசியக் கொடியிளை அனைந்து வீடுகளிலும் ஏற்றி இந்திய சுதந்திரத்தினையும், அதற்காக பாடுபட்ட சுதந்திரப்போராட்டத் தியாகிகளையும் நினைவில் கொள்ளுதல்

கத்திப்பாரா விபத்து..ரூ.25 லட்சம் நிவாரண தொகை வழங்க வேண்டும்..! தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த ஓபிஎஸ்

5. சுகாதாரம்

சுகாதாரம் மற்றும் சுற்றுப்புற தூய்மையை மையப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு 'எழில்மிகு கிராமம்' என்ற சிறப்பு பிரசாரம் ஒருங்கிணைந்த முயற்சியுடன் பல்வேறு துறைகள் மற்றும் சமூக பங்கேற்புடன் மேற்கொள்ளுதல் குறித்து விவாதித்தல். இச்சிறப்பு பிரசாரத்தில் கீழ்க்கண்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அனைத்து பொது இடங்களையும் சுத்தம் செய்தல் மற்றும் பொது இடங்களை அசுத்தம் செய்யாதிருத்தல். குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்,கழிப்பறை பயன்பாடு, குப்பைகளை வீட்டிலேயே தரம் பிரித்தல், திடக்கழிவு மேலாண்மை மற்றும் திரவக்கழிவு மேவாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஒரு முறை பயன்படுத்தக் கூடிய நெகிழி பொருட்களை தவிர்க்கவும் அவற்றிற்கு மாற்று பொருட்களை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தூய்மையான மற்றும் பசுனமயான கிராமத்தை உருவாக்குதல், கழிப்பறை வசதி, திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மையில் கிராம ஊராட்சி தன்னிறைவற்ற நிலையினை அடைந்திட தேவையான வாதிகளை கண்டறியும் நோக்கில் 'கிராம ஊராட்சிக்கான நிறைவான சுகாதரத் திட்டம் -Sanllation Saturation Plan மற்றும் அதற்கான திட்ட அறிக்கையினை (Detalked Project Fuport) தயாரித்தல் குறித்து விவாதித்தல்

6. பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடைசெய்தல்

தமிழ்நாடு அரசினைத் தொடர்ந்து இந்திய அரசு ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கரான பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் கொடிகள் போன்றவை தயாரித்தல். கிராம ஊராட்சியில் தடைசெய்யப்பட்டுள்ள ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்துவதை முற்றிலுமாக தவிர்த்து தமிழகத்தை பிளாஸ்டிக் இல்லா மாநிலமாக உருவாக்கிட முழு ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பிளாஸ்டிக் ஒழிப்பு, டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு, அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி உள்ளிட்ட அம்சங்கள் விவாதிக்கப்பட்டு அதனுடைய அறிக்கையை 22 ஆம் தேதிக்குள அனுப்பி வைக்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

திமுகவுக்கு ஜால்ரா போடுற வேலை எல்லாம் வேணாம்.. சூரி முறையா மன்னிப்பு கேள்.. இந்து மக்கள் கட்சி .

 

click me!