தமிழக அரசு மருத்துவமனைகளில் 4,308 காலி பணியிடங்கள்… அமைச்சர் மா.சுப்ரமணியன் சூப்பர் தகவல்!!

By Narendran SFirst Published Aug 8, 2022, 5:24 PM IST
Highlights

தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 4,308 பணியிடங்கள் செப்டம்பர் மாதத்திற்குள் நிரப்பப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 4,308 பணியிடங்கள் செப்டம்பர் மாதத்திற்குள் நிரப்பப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில், 1,000க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் என 4,308 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தங்கம், வெண்கலம் கண்டெடுப்பு.. தங்கத்திலான பட்டயம் கிடைத்ததாக தகவல்

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியமான எம்.ஆர்.பி., வாயிலாக நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் முடிந்து, செப்டம்பர் இறுதிக்குள் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். கேரளாவில் குரங்கம்மை பாதிப்பு இருப்பதால், எல்லை பகுதியான 13 இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எல்லை பகுதியில் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது என்று தெரிவித்தார். இதனிடையே தென்மேற்கு பருவ மழை காரணமாக, காவிரி, பவானி, வைகை, தாமிரபரணி போன்ற ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆக்ஸ்ட் 25 ல் பொறியியல் கலந்தாய்வு.. எப்போது வரை நடைபெறும்..? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு..

இதை அடுத்து ஆறுகளை சுற்றியுள்ள பகுதிகளில் தொற்று நோய் தடுப்பில் அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து, மா.சுப்ரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. தற்காலிக முகாம்களில் மருத்துவ குழு அமைக்கப்பட்டு, உரிய மருந்துகள் வழங்கப்படுகின்றன. காய்ச்சல், சிறுகாயங்கள், கண் நோய், தோல் நோய் போன்ற சிறு உபாதைகளுக்கு, மருத்துவ சிகிச்சை மற்றும் தொடர் பராமரிப்பு அளிக்கப்படுகிறது. கர்ப்பிணியரை, அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!