ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தங்கம், வெண்கலம் கண்டெடுப்பு.. தங்கத்திலான பட்டயம் கிடைத்ததாக தகவல்

Published : Aug 08, 2022, 05:18 PM IST
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தங்கம், வெண்கலம் கண்டெடுப்பு.. தங்கத்திலான பட்டயம் கிடைத்ததாக தகவல்

சுருக்கம்

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தங்கத்தால் ஆன பட்டயம் மற்றும் பறவை வடிவத்துடன் கூடிய அலங்கார கிண்ணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  

தாமிரவருணி என்று சொல்லப்படும் பொருநை நதிக்கரையோர நாகரிகம் குறித்து தொடர்ந்து பல்வேறு ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  குறிப்பாக நதிக்கரையோரங்களில் உள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கை உள்ளிட்ட இடங்களில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் படிக்க:கத்திப்பாரா விபத்து.. நிவாரண தொகையை அறிவித்த முதல்வர் ஸ்டாலின் !

இங்கு கண்டெடுக்கப்படும் தொல் பொருட்கள் மூலம் பண்பாடு, வணிகம், நாகரிகம் ஆகியவற்றில் தமிழர்கள் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. தொல்லியல் துறை சார்பில் கடந்த 8 மாதங்களாக ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த காலக்கட்டத்தில் அங்கு இதுவரை 70 க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க:ஆக்ஸ்ட் 25 ல் பொறியியல் கலந்தாய்வு.. எப்போது வரை நடைபெறும்..? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு..

இந்நிலையில் ஆதிச்சநல்லூர் சி சைட் எனப்படும் அலெக்சாண்டர் ரியாவில் ஏற்கனே அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.  இந்த இடத்தில் 30 செ.மீ ஆழத்தில் நடைபெற்ற அகழாய்வு பணியில்,தங்கத்தால் ஆன பட்டயம், வெண்கல வடிக்கட்டி, 2 கிண்ணம் தாங்கிய பறவை வடிவத்துடன் கூடிய அலங்கார கிண்ணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் 18 இரும்பு பொருள்கள் கண்டெக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

PREV
click me!

Recommended Stories

இரண்டு ரெய்டுக்கு பயந்து அதிமுகவை அமித்ஷாவிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! நீயெல்லாம் பேசவே கூடாது.. அமைச்சர் ரகுபதி
தமிழகத்தில் வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை 75,035 ஆக உயர்வு! தலைமை தேர்தல் அதிகாரி தகவல்