அதிமுக தலைமை அலுவலகம் இருக்கும் சாலையின் பெயர் மாற்றம்.! புதிய பெயரை சூட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்

By Ajmal Khan  |  First Published Apr 25, 2023, 1:21 PM IST

அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலையின் பெயர் மாற்றப்பட்டு முன்னாள் இந்திய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வி.பி. இராமன் அவர்கள் நினைவாக "வி.பி. இராமன் சாலை" எனப் புதிய பெயர் சூட்டப்பட்ட சாலையின் பெயர் பலகையை  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.


அதிமுக அலுவலக சாலை பெயர் மாற்றம்

அதிமுக தலைமை அலுவலகம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ளது. இது போல பல முக்கிய திருமண மண்டபங்கள், மருத்துவமனைகள் அந்த சாலையில் உள்ளது. இந்தநிலையில் முன்னாள் இந்திய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வி.பி. இராமன் நினைவை போற்றும் விகையில் அந்த சாலைக்கு வி.பி. இராமன் சாலை என பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,  மறைந்த வி.பி. இராமன் அவர்கள். முன்னாள் இந்திய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் ஒன்றிய அரசின் சட்ட அலுவலராக நியமிக்கப்பட்ட முதல் தென்னிந்தியராகவும். பின்னர் தமிழ்நாடு அரசின் அட்வகேட் ஜெனரலாகவும், அவர் இறக்கும் நாள் வரை இந்திய வழக்கறிஞர் கழகத்தின் முன்னணி உறுப்பினராகவும் இருந்தார். 

Tap to resize

Latest Videos

சர்வதேச மாநாடு, விளையாட்டுப் போட்டியை மதுவின்றி நடத்த முடியாதா? மது வழங்குவது என்ன தமிழ்ப் பண்பாடா? அன்புமணி

வி.பி.ராமன் பெயர் சூட்டிய முதலமைச்சர்

சட்டக் கல்லூரியில் துணைப் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்கையில் பெரிதும் ஈர்க்கப்பட்டு திராவிட இயக்கத்தில் சேர்ந்து செயல்பட்டார். பேரறிஞர் அண்ணா அவர்களின் ஆங்கில இதழான ஹோம் லேண்ட் இதழின் துணை ஆசிரியர் என்று பல பொறுப்புகளை வகித்தார். முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் சமகாலத்து தலைவர்களின் பேரன்பையும் நன்மதிப்பையும் பெற்றவராகவும் திகழ்ந்தார். கல்வி மட்டுமின்றி, கர்நாடக இசை, ஆங்கில இலக்கியம், கிரிக்கெட் என்று பன்முகத்திறன் கொண்டவராகவும் விளங்கினார். வி.பி. இராமன் அவர்களுக்கு சிறப்பு சேர்க்கின்ற வகையில், மெரினா கடற்கரை காமராஜர் சாலை முதல் இந்தியன் வங்கி தலைமை அலுவலகம் வரை 

அவ்வை சண்முகம் சாலை பெயர் மாற்றம்

கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி செல்லக்கூடிய அவ்வை சண்முகம் சாலை என பெயரிடப்பட்டுள்ள சாலைப்பகுதியினை "வி.பி. இராமன் சாலை" என தமிழ்நாடு அரசால் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  வி.பி. இராமன் அவர்கள் வாழ்ந்த லாயிட்ஸ் கார்னர் இல்லமும் இப்பகுதியிலே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சாலைக்கு புதிய பெயர் சூட்டும் நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர், பிரியா, உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

இதையும் படியுங்கள்

கலைஞரின் மகனை என் தோளில் சுமப்பதிலே எனக்கு என்ன வெட்கம்.? நான் கோபாலபுரத்து விசுவாசி- துரைமுருகன்
 

click me!