இனி கிளாம்பாக்கத்தில் இருந்தே அனைத்து தென் மாவட்ட பேருந்துகளும் இயக்கப்படும்.! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

By Ajmal Khan  |  First Published Jan 29, 2024, 9:44 AM IST

அனைத்து போக்குவரத்து கழகங்களை சார்ந்த தென் மாவட்டங்களுக்கு செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக செல்லும் பேருந்துகள் வருகிற 30ஆம் தேதி முதல் தேதி முதல் சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்  என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 


கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காகவும் சென்னை மக்களின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் வண்டலூரை அடுத்து கிளாம்பாக்கத்தின் அதிநவீன கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கடந்த டிசம்பர் மாதம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.  இதில் முதற்கட்டமாக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் அனைத்து தடப் பேருந்துகளும்    கிளாம்பாக்கத்தில் (KCBT) இருந்து இயக்கப்பட்டது. இதன் தொடர்ந்து ஜனவரி 24 ஆம் தேதி முதல் தனியார் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. 

Tap to resize

Latest Videos

பொதுமக்கள் குற்றச்சாட்டு

இருந்த போதும் கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னைக்குள் வர சிரமம் ஏற்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டியிருந்தனர். மேலும் ஆட்டோவில் வீட்டிற்கு செல்ல குறைந்தது 500 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை கேட்பதாகவும் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் வருகிற 30ஆம் தேதி முதல் அனைத்து போக்குவரத்து கழகங்களை சார்ந்த தென் மாவட்டங்களுக்கு செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக செல்லும் 710 பேருந்துகளின் புறப்பாடுகள் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக இயக்கப்படும் பேருந்துகள் ஜனவரி 30ஆம் தேதி  முதல் இயக்கப்பட மாட்டாது.

தாம்பரம் வரை பேருந்துகள் இயக்கம்

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இசிஆர் வழியாக செல்லும் பேருந்துகளும் , பூந்தமல்லி வழியாக வேலூர், ஓசூர், ஆம்பூர் , திருப்பத்தூர் இயக்கப்படும் பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். மேற்கண்ட பேருந்து இயக்கம் மாற்றத்தில் பயணிகள் வசதிக்காக விழுப்புரம் போக்குவரத்து கோட்ட பேருந்துகள் மட்டும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி செல்லும் போது,  தாம்பரம் வரை இயக்கப்பட்டு பின் அங்கிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. 

இதையும் படியுங்கள்

குறைந்தது வெங்காயம் விலை.. அதிகரித்தது முருங்கைக்காய், அவரைக்காய் விலை- கோயம்பேட்டில் காய்கறி விலை என்ன.?

click me!