ஸ்பெயினில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு.. தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க களத்தில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்

By Ajmal Khan  |  First Published Jan 29, 2024, 8:36 AM IST

முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 8 நாட்கள் பயணமாக ஸ்பெயின் சென்றுள்ள நிலையில், இன்று உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஸ்பெயினில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பல ஆயிரம் கோடி அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்படும் என கூறப்படுகிறது.


தமிழகத்திற்கு உலக முதலீடு

2030க்குள் தமிழ்நாடு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்டுவதே இலக்காக கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் பல்வேறு நாட்டின் தொழில் முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்த்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 6 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து அடுத்த கட்டமாக ஸ்பெயினில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி முதலீடுகள் ஈர்க்க தமிழக அரசு திட்டமிட்டது. இதற்காக ஸ்பெயினில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது.

Latest Videos

ஸ்பெயினில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு

இந்த நிலையில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 8 நாள் பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்பெயின் சென்றுள்ளார்.  அங்கு பல்வேறு முதலீட்டாளர்களை முதலமைச்சர் சந்திப்பதோடு, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்கவுள்ளார். மேலும் ஸ்டெயின் நாட்டில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்றும் அதில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

அதன்படி ஸ்பெயின் நாட்டில் முதலீட்டாளர்கள் மாநாடு இன்று நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பல்வேறு நிறுவனங்களை சார்ந்த தொழிலதிபர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகளுக்கான ஒப்பந்தம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்

ஸ்பெயினில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்த உள்ளேன்: விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் பேட்டி

click me!