ஒரு லட்சம் ரூபாயை அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு.! உடனே விண்ணப்பிங்க- யாருக்கெல்லாம் தெரியுமா.?

By Ajmal Khan  |  First Published Jan 3, 2025, 8:07 AM IST

ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசுடன் கூடிய “மாண்புமிகு முதலமைச்சரின் விருது வழங்குகிறது. விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் http://awards.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 17.01.2025 வரை விண்ணப்பிக்கலாம்.


தமிழக அரசு திட்டங்கள்

தமிழக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் மக்களுக்கு உதவிடும் வகையில் நிதி உதவி திட்டங்களும் செயல்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் சுற்றுச்சூழலை பாதுகாப்பவர்களுக்கு விருது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுபவர்களுக்கு விருது என பல திட்டங்களையும் செயல்படுத்துகிறது. அந்த வகையில் நீர் நிலைகள் பாதுகாக்க முயற்சி மேற்கொள்பவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.

Tap to resize

Latest Videos

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழலையும் சூழல் அமைப்புகளையும் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இச்சூழல் அமைப்புகளுக்கு மூலாதாரமாக விளங்குவது நீர் நிலைகளாகும். எனவே, இச்சூழல் அமைப்புகளைப் பாதுகாத்துப் பேணிடவும், 

நீர் நிலை பாதுகாப்பு விருது

மாநிலத்தின் நீர் வளத்தைப் பெருக்கிடவும் அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர் நிலைகளைப் பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் செயல்பாட்டாளர்களான பொதுமக்கள். தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகளைப் போற்றி கவுரவிக்கவும். நீர் நிலைகளைப் பாதுக்கத்திட வேண்டும் என்ற எண்ணத்தை மக்களிடையே விதைத்திடவும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு ஒருவர் என 38 பேருக்கு "மாண்புமிகு முதலமைச்சரின் நீர்நிலைப் பாதுகாவலர்" விருதும், ரூ. 1 இலட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது. 

விண்ணப்பிக்க வேண்டிய நாள்

அதன்படி இந்த ஆண்டிற்கான விருதுகள் விரைவில் வழங்கப்படவுள்ளன. எனவே, இந்த விருதிற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் தமிழ்நாடு விருதுகள் (TN Awards)" (http://awards.tn.gov.in) வலைதளம் மூலம் வருகின்ற 02.01.2025 முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 17.01.2025 ஆகும்.

 விரிவான வழிகாட்டு நெறிமுறைகள்

 http://www.environment.tn.gov.in/  https://tnclimatechangemission.in/home/ வலைதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

  • விண்ணப்பிக்கக்கூடிய நபர்கள் எந்த மாவட்டத்தில் அதிகபட்ச பணிகளை செயல்படுத்தியுள்ளனரோ. அம்மாவட்டத்தினைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
  • ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க முடியாது. அவ்வாறு விண்ணப்பிக்கப்படும் பட்சத்தில், ஒரு மாவட்டத்தின் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.
  • "தமிழ்நாடு விருதுகள் (TN Awards)" (http://awards.tn.gov.in) இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட இணையவழி விண்ணப்பங்கள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். தேர்வுக் குழுவினரின் முடிவே இறுதியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
click me!