லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்ந்தால் அசுர வேகத்தில் காய்கறிகள் விலையேறும்

First Published Mar 31, 2017, 9:23 AM IST
Highlights
The strike price for vegetables at a speed monster trucks persists


வேலூரில் முதல் நாள் லாரிகள் வேலை நிறுத்தத்தால் முன்னெச்சரிக்கையாக காய்கறிகள் வந்திறங்கியதால் விலை ஏறவில்லை. ஆனால், லாரிகள் வேலைநிறுத்தம் தொடர்ந்தால் காய்கறிகளின் விலை அசுர வேகத்தில் ஏறும்.

“தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி உயர்வைத் திரும்பப் பெற வேண்டும், லாரிகளுக்கு காப்பீட்டுத் தொகை உயர்வு, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கட்டண உயர்வு போன்றவற்றைத் திரும்ப பெற வேண்டும்” என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நேற்று முதல் காலவரையற்ற லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

வேலூர் மாவட்டத்திலும் லாரிகள் வேலை நிறுத்தத்தால் நேற்று லாரிகள் எதுவும் இயங்கவில்லை. ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற பக்கத்து மாநிலங்களுக்குச் சென்று பொருட்களை ஏற்றி வரும் சுமார் 3000-க்கும் மேற்பட்ட லாரிகள் வேலூர் மாவட்டத்தில் உள்ளன.

வெளி மாநிலங்களில் இருந்து வேலூர் காய்கறி சந்தைக்கு வெளிமாநில லாரிகள் மூலம் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. அதேபோன்று பருப்பு வகைகள், அரிசி போன்றவையும் லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகின்றன.

இந்த நிலையில் நேற்று லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கியதால் வேலூரில் இருந்து வெளிமாநிலங்களுக்கு சென்ற லாரிகள் அங்கேயே நிறுத்தப்பட்டது. வெளி மாநிலங்களில் இருந்து வேலூருக்கு வந்த லாரிகள் வேலூரில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் மாவட்டம் முழுவதும் சுமார் 3000 லாரிகள் ஓடவில்லை.

அதிகாலையிலேயே சந்தைக்குச் சென்று காய்கறி ஏற்றி வந்த லாரிகளில் காய்கறிகளை இறக்கிவிட்டு திரும்பிச் சென்றன. அனைத்து பொருட்களும் லாரிகள் மூலம் வேலூருக்கு கொண்டுவரப்பட்டு விட்டதால், வேலை நிறுத்தத்தால் நேற்று எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இன்றும், போராட்டம் தொடர்ந்தால் காய்கறி விலை அசுர வேகத்தில் உயரும் நிலை உள்ளது.

அதேபோன்று அரிசி, பருப்பு வகைகள் மற்றும் கட்டுமானத்திற்கு தேவையான சிமெண்டு வருகை பாதிக்கப்படும் என லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

click me!