
கதிராமங்கலத்தில் ஒஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட 10 பேரை விடுவிக்க கோரி 8 நாளாக கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி அமைத்த குழாயில் இருந்து திடீரென கச்சா எண்ணெய் வெளியேறியதால் பொதுமக்கள் அச்சமைடைந்தனர்.
இதனால் அப்பகுதி மக்கள் ஒஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராகவும் எண்ணெய் குழாயை அகற்ற கோரியும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டுவர்கள் மீது தடியடி நடத்தி 10 க்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி கடந்த 7 நாட்களாக போராட்டத்தில் கதிராமங்கலம் மக்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் 8 வது நாளாக இன்றும் கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டு போராட்டம் வலுப்பெற்று வருகிறது.