தமிழகத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தலைமை செயலாளர் உத்தரவு….

Asianet News Tamil  
Published : Jul 08, 2017, 06:07 AM ISTUpdated : Sep 19, 2018, 12:51 AM IST
தமிழகத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தலைமை செயலாளர் உத்தரவு….

சுருக்கம்

4 IAS officers transferred in Tamil Nadu by chief secretary order

தமிழகத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அரசானையில் கூறியிருப்பதாவது:

இமாச்சலபிரதேசத்தின் உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் விவகாரங்களின் முன்னாள் இயக்குனர் சுதா தேவி, தமிழ்நாடு தமிழக சமுதாய பாதுகாப்பு திட்டங்கள் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் கிரன் குராலா, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் இணைச் செயலாளர் லட்சுமி பிரியா, அரியலூர் மாவட்ட கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை துணைச் செயலாளர் ஜெ.இன்னொசண்ட் திவ்யா, நீலகிரி மாவட்ட கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 02 January 2026: 4ம் தேதி தமிழகம் வருகிறார் அமித்ஷா..! புதுக்கோட்டையில் பிரமாண்ட ஏற்பாடு
செல்போன், லேப்டாப்பில் சார்ஜ் போட்டு ரெடியா வச்சுக்கோங்க.. இன்று தமிழகத்தில் 7 மணிநேரம் மின்தடை!