தமிழகத்தின் வரலாற்றில் இல்லாத அளவுக்கு முதல் முறையாக அதிகனமழை தென் மாவட்டங்களில் கொட்டித்தீர்த்துள்ளது.
நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் அதிக மழை பொழிவு காலை முதல் பெய்துள்ளது. நெல்லை மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி காவல்துறை தீயணைப்பு துறை உள்ளிட்டோர் இணைந்து பேரிடர் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் சராசரியாக 28 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.
தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் 45 ஆயிரம் கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 40,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால் அணைகள் மிக வேகமாக நிரம்பி வருகிறது.
undefined
தாமிரபரணி ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. அணையில் கூடுதல் தண்ணீர் திறந்தால் மிக வேகமாக ஆற்றில் தண்ணீர் வரும் என்பதால் கரையோர மக்களை வெளியேற்ற தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கரையோர மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருச்செந்தூர் கோயிலைத் தொட்ட வெள்ளப்பெருக்கு. கோயிலைச் சுற்றி முழங்கால் அளவுக்கு நீர் தேங்கியுள்ளது விடாது பெய்து வரும் கனமழையால் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான குலசேகரன்பட்டினம், காயல்பட்டினம், ஆறுமுகநேரி, கல்லாமொழி, ஆலந்தலை, பரமன்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை தொடர்ந்து கனமழை பெய்தது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதில் காயல்பட்டினத்தில் 95 செமீ மழையும் திருச்செந்தூரில் 69 செமீ மழையும் பதிவாகியுள்ளது. திருச்செந்தூர் எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. கோவிலுக்குள் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. கடலும் கோவிலும் ஒன்றாக காட்சி அளிக்கிறது. கோவிலை சுற்றி மக்கள் வலம் வரும் தேரோடும் வீதி எங்கும் தண்ணீர் மயமாக காட்சி அளிக்கிறது.
தமிழகத்தில் பெய்த மழைகளிலே இது புது வரலாறாக இருக்கிறது. குறிப்பாக காயல்பட்டினத்தில் 946 மிமீ கனமழையும், திருச்செந்தூரில் 689 மிமீ கனமழையும் பதிவு செய்துள்ளது. திருச்செந்தூர் பகுதி குறிப்பாக முருகன் கோவிலுக்கு வெளியே வெள்ளம் போல் நீர் சூழ்ந்துள்ளது. 20 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்யும் கணித்திருந்த நிலையில், தற்போது 90 செமீ மேல் கனமழை பெய்துள்ளது.
காயல்பட்டினம் பகுதியில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது. 4 தென் மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. அதிகனமழை தொடரும் என்றும், குறிப்பாக அடுத்த 12 மணி நேரத்துக்கு மழை அதிகரித்து பிறகு மெல்ல மெல்ல குறையும் என்றும் வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
குறைந்த விலையில் தாய்லாந்தில் நியூ இயர் கொண்டாட ஆசையா..சூப்பரான ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்..