தென் மாவட்டங்களில் தொடர்மழை காரணமாக ரயில் சேவைகள் ரத்து

By SG BalanFirst Published Dec 18, 2023, 6:08 PM IST
Highlights

நெல்லை - செங்கோட்டை பிரிவில் உள்ள வழித்தடங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுவதா தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

தென்மாவட்டங்களில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும் பல ரயில்கள் பகுதி அளவுக்கு மட்டும் இயக்கப்படும் என்றும் ரயில்வே அறிவித்துள்ளது.

நெல்லை - செங்கோட்டை பிரிவில் உள்ள வழித்தடங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுவதா தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

வைஷ்ணவி கட்ரா எக்ஸ்பிரஸ், பாலருவி எக்ஸ்பிரஸ், குமரி புதுவை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. வாஞ்சி மணியாச்சி - திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரயிலும் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நெல்லை கனமழை: வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி தீவிரம்

மைசூரு எக்ஸ்பிரஸ், செந்தூர் எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ், தாதர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் இன்று (டிசம்பர் 18ஆம் தேதி) மதுரையில் இருந்து இயக்கப்படும் என்ற கூறப்பட்டுள்ளது. நாகர்கோயில் - தாம்பரம் ரயில், பெங்களூரு எக்ஸ்பிரஸ் ஆகியவையும் மதுரையில் இருந்து இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளும் குறைக்கப்பட்டுள்ளதாவும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் கூறியுள்ளது. பயணிகளின் வருகைக்கு ஏற்ப குறைந்த அளவில் பேருந்துகளை இயக்க முடிவு செய்திருப்பதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஆனால், தென்மாவட்டங்களில் இருந்து பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் நிலைமைக்கு ஏற்ப இயக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

எல்லாம் போச்சே... நெல்லையில் கனமழையால் இடிந்து விழுந்த வீடுகள்... தவிக்கும் பொதுமக்கள்

click me!