
செம்மொழி தமிழாய்வு நிறுவனம், திருவாரூர் பல்கலைகழகத்துடன் இணைக்கக் கூடாது என தீர்மானம் போடப்பட்டுள்ளது.
சென்னை, தரமணியில் தமிழ்நாடு சாலை போக்குவரத்து நிறுவன வளாகத்தில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூர் அருகே பெரும்பாக்கத்தில் 17 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, பொதுப்பணித்துறை மூலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்துடன் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை இணைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை, திருவாரூர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கக்கூடாது என தீர்மானம் போடப்பட்டது.
செம்மொழி தமிழாய்வு நிறுவனம், எக்காரணம் கொண்டும் தன்னாட்சி அதிகாரத்தை இழக்கக் கூடாது. தமிழ் வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசின் நிதியை பெறுவது எனவும் தீர்மானம் போடப்பட்டது.