
மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கருப்பச்சாமி என்ற விசாரணை கைதி மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் கரிமேடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
தேனி மாவட்டம் ராஜதானியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது ஊரில் நடைபெற்ற அடிதடி சண்டை வழக்கில் கருப்பசாமியை கைது செய்து மதுரை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.
இந்நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக உறவினர்களுக்கு இன்று தகவல் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கருப்பாசாமியின் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி சிறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டுமென்று கரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
சிறை அதிகாரிகளுக்கு எதிரான புகாரை கரிமேடு காவல்துறையினர் வாங்க மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் கரிமேடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அந்தப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.