
மதுரையில் வரும் 22ம் தேதி நடைபெறவுள்ள ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பைபாஸ் சாலை பகுதியில் பேரணி நடத்தலாம் என்றும் ஆயுதங்கள் உள்ளிட்டவைகளை எடுத்து செல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன் உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது.
1925 ஆம் ஆண்டு விஜயதசமி தினத்தில் துவங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆண்டுதோறும் விஜயதசமி அன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் இந்த வருடம் ஆர்.எஸ்.ஏஸ். ஊர்வலம் கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனக்கோரி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்தது.
இதையடுத்து மதுரையில் வரும் 22ம் தேதி பேரணி நடத்த அனுமதி கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் பைபாஸ் சாலை பகுதியில் பேரணி நடத்தலாம் என்றும் ஆயுதங்கள் உள்ளிட்டவைகளை எடுத்து செல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளனர்.