
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தழிகத்தின் பல்வே பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரததில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்து.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜுன் மாதம் ஒன்றாம் தேதி முதல் இதுவரை தமிழகத்தில் பதிவாகியுள்ள மழையின் அளவு வழக்கத்தைவிட 12 சதவீதம் அதிகம் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த பாபு கலயில் என்பவர் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டு, சுனாமி வரும் அதில் குறிப்பிட்டுள்ளார். பாபுவின் இந்த கடிதம் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.