
திருவள்ளூர்
நபிகள் நாயகம் பிறந்த நாளான மீலாது நபியை முன்னிட்டு டிசம்பர் 2-ஆம் தேதி திருவள்ளூரில் உள்ள சாராயக் கடைகளை மூடவும், பதுக்கி வைத்து விற்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் எ.சுந்தரவல்லி எச்சரித்துள்ளார்.
திருவள்ளூர் ஆட்சியர் எ.சுந்தரவல்லி நேற்று செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், "திருவள்ளூர் மாவட்டத்தில் நபிகள் நாயகம் பிறந்த நாளான டிசம்பர் 2-ஆம் தேதி, தமிழ்நாடு சாராய சில்லறை விற்பனைக் கடைகள், அனைத்து விடுதிகள் மற்றும் கிளப்புகளில் உரிமம் பெற்று செயல்பட்டு வரும் சாராய பானக் கூடங்கள் அதனுடன் இணைந்த பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும்.
எனவே, அன்றைய நாளில் சாராய விற்பனை, சாராயத்தை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கடத்துதல், பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டோர் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டப்பிரிவின் படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று அதில் அவர் எச்சரித்துள்ளார்.