
திருப்பூர்
திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் டிசம்பர் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள முகாமில் பங்கேற்று கல்விக் கடன் பெற மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நேற்று செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில், "திருப்பூர் மாவட்டத்தில் மேல்நிலைக் கல்வி தேர்ச்சிப் பெற்று, உயர் கல்விப் படிப்பில் சேர்ந்துள்ள தகுதியான மாணவர், மாணவிகளுக்கு வங்கிகளில் கல்விக் கடன் பெறுவதிலுள்ள சிரமங்களைக் குறைத்து, அவர்கள் எளிதாக கல்விக்கடன் பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும் நோக்கில் டிசம்பர் 1-ஆம் தேதி காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்விக்கடன் முகாம் நடைபெறவுள்ளது.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த முகாமில், கல்விக்கடன் கோரி விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், மாணவிகள், அவர்களது பள்ளி, கல்லூரி சான்று, இருப்பிடச் சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் இம்முகாமில் கலந்துகொள்ளலாம்.
மேலும், இந்த முகாமில் வித்யாலஷ்மி போர்டல் குறித்த விவரங்களையும் அறியலாம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.