கார்த்திகை தீபத் திருவிழா.! உச்சத்தை தொட்ட பூக்களின் விலை... மல்லிகை, முல்லைப் பூ விலை என்ன தெரியுமா.?

By Ajmal Khan  |  First Published Nov 26, 2023, 9:57 AM IST

கார்த்திகை தீப திருவிழாவையொட்டி மலர் சந்தையில் பூக்களின் விலையானது பல மடங்கு அதிகரித்துள்ளது. அந்த வகையில் மல்லிகைப்பூ ஒரு 2200 ரூபாயை கடந்துள்ளது. 


 பூக்களின் விலை அதிகரிப்பு

பண்டிகை காலங்களில் வழக்கமாக பூக்கள் விலை உயரும். சாதாரண நாட்களை விட பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்களில் விலை விண்ணைத்தொடும் அளவிற்கு பூக்கள் விலை அதிகரிக்கும், இந்தநிலையில் சபரிமலை சீசன் மற்றும் கார்த்திகை தீபத்தையொட்டி பூக்களின் விலையானது கிடு, கிடுவென உயர்ந்துள்ளது. அந்தவகையில், கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரமும், பெளர்ணமியும் இணைந்து வரக்கூடிய நன்னாளில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது வழக்கம். 

Tap to resize

Latest Videos

திருவண்ணாமலை தீபத்திருவிழாவையொட்டி கார்த்திகை தீபம் வீடுகளிலும் ஏற்றி வைத்து வழிபடுவது வழக்கம். வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட்டு. வீடுகளில் தீபங்கள் ஏற்றுவார்கள். இதன் காரணமாக வீடுகளில் அதிகளவு பூக்கள் வாங்குவார்கள் என்பதால் பூக்கள் விலை உச்சத்தை தொட்டுள்ளது. 

உச்சத்தை தொட்ட மல்லிக்கைப்பூ விலை

மதுரை மாட்டுத்தாவணி மலர்சந்தையில் மதுரை மல்லிகை பூ - நேற்று 1800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 2200ரூபாயாக உயர்ந்துள்ளது. முல்லைப்பூ நேற்று 800க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 1000 ரூபாய்க்கும், கனகாம்பரம்  பூ நேற்று 800க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 1200 விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

பிச்சி பூ 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 1000ரூபாய்க்குக்கும், சம்மங்கிப்பூ 150ரூபாய்க்கும், மெட்ராஸ் மல்லி 800ரூபாய்க்கும், அரளி 400ருபாய்க்கும், பட்டன் ரோஸ் 200 ரூபாய்க்கும்,  செண்டுமல்லி 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பூக்களின் விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் குறைந்த அளவிலேயே பூக்களை வாங்கி செல்லும் நிலை உருவாகியுள்ளது. 

இதையும் படியுங்கள்

Tamilnadu Rain Alert : நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! ஆழ்கடல் மீனவர்கள் கரை திரும்ப அவசர உத்தரவு
 

click me!