தமிழகத்தில் கொட்டப்படும் கேரளாவின் கழிவுகள்..! லாரிகள் பறிமுதல் செய்யப்படும்.!எச்சரிக்கை விடுத்த காவல் துறை

Published : Dec 21, 2022, 08:56 AM IST
தமிழகத்தில் கொட்டப்படும் கேரளாவின் கழிவுகள்..! லாரிகள் பறிமுதல் செய்யப்படும்.!எச்சரிக்கை விடுத்த காவல் துறை

சுருக்கம்

தமிழக கேரளா எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி போன்றவற்றில் கேரளாவிலிருந்து கோழி இறைச்சி கழிவுகள், நெகிழி கழிவுகள் போன்றவை சட்டவிரோதமாக கொட்டப்பட்டு வருவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு அனைத்து எல்லையோர மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்கள்.

தமிழகத்தில் கேரள கழிவுகள்

கேரள கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவது தொடர்பாக  தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு சரக்கு ஏற்றி செல்லும் வாகனங்கள் திரும்ப வரும் போது குறைந்த பணத்திற்கு ஆசைப்பட்டு அங்குள்ள இடைத்தரகர்கள் மூலம் கழிவுகளை ஏற்றி வந்து இங்கு கொட்டிவிடுகின்றனர். மேலும் தமிழகத்திலிருந்து கேரளாவில் பழைய இரும்பு வியாபாரம் செய்யும் பலர், அங்குள்ள நபர்களின் கடைகளில் குப்பைகளிலிருந்து பழைய இரும்பை பிரித்து எடுத்து விட்டு பின்பு மீதமாகும் உபயோகமில்லா குப்பையினை தமிழக எல்லைக்குள் சட்டவிரோதமாக கடத்துகின்றனர். இவற்றை தமிழகத்தில் உள்ள சில இடைத்தரகர்களின் உதவியோடு செல்கின்றனர். ஆள் நடமாட்டமில்லாத இடங்களில் கொட்டி மேலும் இது சம்பந்தமாக தமிழக கேரளா எல்லையோர மாவட்டத்திலுள்ள கன ரக உரிமையாளர் கூட்டமைப்பினரிடம் கலந்தாய்வு கூட்டங்கள் நடைபெற்று வாகன வருகின்றன.

தமிழகத்தில் நடப்பது ஆட்சியா.? காட்டாச்சியா.? முடிவு கட்ட காத்திருக்கு மக்கள்- இறங்கி அடிக்கும் இபிஎஸ்

வாகனங்கள் பறிமுதல்

ஏற்கனவே கழிவுகள் கொட்டிய விவகாரத்தில் தென்காசி மாவட்டத்திலுள்ள திருவேங்கடம் காவல் நிலையத்தில் இரு வழக்குகளும், ஆலங்குளம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழக காவல்துறை தனிப்படை அமைத்து, இவ்வழக்குகளின் குற்றவாளிகளை கண்காணித்து, ஏழு கன ரக வாகனங்களை பறிமுதல் செய்தும், ஒன்பது நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது மேலும் தமிழக கேரளா எல்லையோர சோதனை சாவடிகளில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் தென்காசி மாவட்டத்திற்குள் இது போன்று சட்ட விரோதமாக புளியரை சோதனை சாவடி வழியாக நுழைய முயற்சித்த நாற்பத்தைந்து வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு மேற்படி வாகனங்கள் கேரளாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

தலைவா! அதிமுக சிதறி கிடக்கிறது; நாங்கள் பதறி துடிக்கிறோம்.. வைரலாகும் அன்வர் ராஜா போஸ்டர்..!

வழக்கு பதிவு- காவல்துறை

மேலும், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் R.கிருஷ்ணராஜ் அவர்களின் தொடர் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கையினால் ஊத்துமலை காவல் நிலைய சரகத்தில் 13.12.2022ம் தேதியன்று பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பயனில்லாத பழைய டயர்கள் அடங்கிய கழிவுகளை கேரளவிலிருந்து கொண்டு வந்த புனலூரைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் மற்றும் திருநெல்வேலியை சேர்ந்த இடைதரகரான கருப்பசாமி என்போர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டும் கழிவுகளை ஏற்றி வந்த கனரக வாகனம் பறிமுதலும் செய்யப்பட்டது.

காவல் துறை எச்சரிக்கை

மேலும் கேரளாவிலிருந்து உயிர் மருத்துவ கழிவுகள் கொண்டு வரப்பட்டு தமிழகத்தில் கொட்டப்படுவதை தடுப்பதற்கு, தென்மண்டலத்தில் இதற்கென ஒரு பிரத்யோக சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதில் சம்மந்தபட்டுள்ள இடைத்தரகர்கள் பற்றிய தரவுகளை சேகரித்து மேற்படி நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யப்படும் என்றும் தென்மண்டல காவல்துறை தலைவர் ஆஸ்ரா கர்க் அவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

விடுதலை புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயற்சி.! திருச்சி சிறப்பு முகாமில் 9 பேர் கைது..! என்.ஐ.ஏ அதிரடி

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழக ஆளுநரை அவமதித்த மாணவிக்கு நீதிமன்றம் கொடுத்த ஷாக்..! பட்டம் ரத்து செய்யப்படுகிறதா?
ரூ. 1,020 கோடிஊழல்..! அதிமுக ஆட்சிக்கு வந்ததும் திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் கம்பி எண்ணப் போவது உறுதி..! இபிஎஸ் சபதம்..!