கல்லூரி மாணவியை படுக்கையறைக்கு அழைத்த காவலர் - காதலன் புகாரால் அதிரடி கைது..!

 
Published : Dec 01, 2017, 04:56 PM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
கல்லூரி மாணவியை படுக்கையறைக்கு அழைத்த காவலர் - காதலன் புகாரால் அதிரடி கைது..!

சுருக்கம்

The police arrested the police in the bedroom and arrested the police and arrested them in jail.

கல்லூரி மாணவியை படுக்கையறைக்கு அழைத்த காவலரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். 

கடந்த 27 ஆம் தேதி காரைக்கால் கடற்கரை பகுதி சாலையில் ஒரு காரில் ஒரு கல்லூரி மாணவி தனது காதலனுடன் இருந்துள்ளார். 

அப்போது, காரைக்கால் கோட்டுச்சேரி ஜீவாநகரை சேர்ந்த ராஜ்குமார் என்ற காவலர் அந்த காதல்ஜோடியிடம் சென்று அவர்கள் வைத்திருந்த செல்போன்களை பறித்து முகவரியை விசாரித்துள்ளார். 

இதைதொடர்ந்து அந்த கல்லூரி மாணவி செல்போன் நெம்பரை கேட்டு வாங்கிகொண்டு உங்கள் மீது விபசார வழக்கு போட்டு விடுவேன் என மிரட்டி வீட்டுக்கு அனுப்பியுள்ளார். 

இதையடுத்து 28ம் தேதி  அந்த கல்லூரி மாணவிக்கு  காவலர் ராஜ்குமார் போன் செய்து காதல் வசனம் பேசியும் படுக்கையறைக்கும் அழைத்துள்ளார். 

இதனால் கோபமடைந்த மாணவி திட்டிவிட்டு போனை கட் செய்துள்ளார். ஆனாலும் விடாத காவலர் மீண்டும் மீண்டும் போன் செய்து நீயும், உன் காதலனும் காரில் எப்படி இருந்தீர்கள் என்பதை படம் பிடித்து வைத்துள்ளதாகவும் உங்கள் போனில் இருந்தும் பல படங்களை  எடுத்து வைத்திருப்பதாகவும் கூறி மிரட்டியுள்ளார். 

இதனால் பயந்த மாணவி, தனது காதலனிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். பின்னர், காதலன் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளரிடம் புகார் அளித்துள்ளார். 

இதுகுறித்து விசாரணை செய்த காவல் ஆய்வாளர் பாலா ராஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தார். 
 

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!