வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட பேருந்து - 40 பயணிகள் பத்திரமாக மீட்பு...!

First Published Dec 1, 2017, 3:32 PM IST
Highlights
40 passengers were rescued from the bus which was hit by a river in the Red Fort in Nellai district.


நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் இருந்து 40 பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். 

கன்னியாக்குமரி, நெல்லை மாவட்டங்களில் கனமழை காரணமாக சாலையெங்கும்  வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக இரண்டு மாவட்டஙகளிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. 

மேலும் ரயில் தண்டவாளங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதால் சில ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 
 
இந்நிலையில் செங்கோட்டை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கால்வாயின் குறுக்கே பாலப் பணிகள் நடைபெற்று வருவதால் பேருந்துகள் செங்கோட்டை வனத்துறை அலுவலகம் வழியாக ஹரிஹரா நதி அருகே உள்ள ஒரு தரைப்பாலம் வழியாக திருப்பி விடப்பட்டது.

இதனிடையே கனமழை காரணமாக தரைப்பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இன்று அதிகாலை கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து நெல்லை நோக்கி சென்ற அரசு பேருந்து தரைப்பாலத்தில் வெள்ளம் ஓடுவது தெரியாமல் சென்றுள்ளது. 

நடுவழியில் வெள்ளத்தில் சிக்கி கொண்ட பேருந்தில் இருந்த 40 பயணிகளும் பேருந்தில் பின்பக்கம் இருந்த அவசர  வழி மூலம் வெளியேற்றப்பட்டு உயிர் தப்பினர். இதையடுத்து பேருந்தை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.   

click me!