சசிக்கும் நடராஜனுக்கும் தான் ஜெ மகள் பற்றி தெரியும்...! அம்ருதா ஜெ. மகள் அல்ல! அடுத்த அதிர்வை கிளப்பும் ஜெ.வின் அண்ணன்!

 
Published : Dec 01, 2017, 01:52 PM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
சசிக்கும் நடராஜனுக்கும் தான் ஜெ மகள் பற்றி தெரியும்...! அம்ருதா ஜெ. மகள் அல்ல! அடுத்த அதிர்வை கிளப்பும் ஜெ.வின் அண்ணன்!

சுருக்கம்

Amruta is not Jayalalithaa daughter! Brother of jayalalitha arouse the vibe!

ஜெயலலிதாவுக்கு மகள் பிறந்தது உண்மை என்றும், பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா தான் என்றும் ஜெ.வின் உறவினர் பரபரப்பு தகவலை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் தோழி கீதா, அம்ருதா தான் ஜெயலலிதாவின் மகள் என்றும் கூறி வந்தார். இந்த நிலையில் மறைந்த ஜெயலலிதாவுக்கு அண்ணன் உறவு முறை வாசுதேவன், ஜெயலலிதாவிற்கு மகள் இருக்கிறார் என்றும் அது பற்றிய முழு விவரம் சசிகலாவுக்கும் நடராஜனுக்கும் தான் தெரியும் என்று அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளார். 

இது தொடர்பாக வாசுதேவன் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். நான், ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமனுக்கும் அவரது முதல் மனைவியான ஜெயம்மாளுக்கும் பிறந்த ஒரே மகன் வாசுதேவன் அந்த முறையில் எனக்கு ஜெயலலிதா தங்கை ஆகிறார். என்னுடைய தந்தையின் இரண்டாவது மனைவி வேதம்மாள் என்கிற சந்தியா. அவர்களுக்கு பிறந்தவர்கள் ஜெயக்குமார், ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் அம்மா வேதம்மாள் அவர்களுக்கும் சினிமா ஆர்ட் டைரக்டர் தாமோதரப்பிள்ளைக்கும் பிறந்த மகள் சைலஜா என்று செய்திகள் வெளியானது. இதை அடுத்து நான் சைலஜாவை சந்திக்க முயற்சித்தேன். ஆனால், ஏழ்மையும், வயது முதிர்வு காரணமாக அவரை நான் சந்திக்க முடியவில்லை. ஆனால், என்னைப் பற்றி அறிந்த சைலஜா குடும்பத்தோடு என்னை பார்க்க வந்திருந்தார். அவருடைய பிறப்பு, குடும்ப வரலாறு அனைத்தையும் பகிர்ந்து கொண்டார். அவர் சொன்ன அனைத்தும் உண்மையாக இருந்ததால். அவர் நிச்சயம் ஜெயலலிதாவின் தங்கை என்பதை உணர்ந்தேன்.

சைலஜாவோடு அம்ருதாவும் வந்திருந்தார். சைலஜா தன்னுடைய மகள் அம்ருதாவை என்னிடம் அறிமுகம் செய்தார். இதன் பிறகு சைலஜா குடும்பத்திற்கும் எங்களுடைய குடும்பத்துக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் சைலஜா உடல்நிலை சரியில்லாமல் காலமானார். மார்ச் மாதம் அம்ருதாவின் தந்தை பார்த்தசாரதியும் மரணம் அடைந்தார். பார்த்தசாரதி மரணப்படுக்கையில் இருந்தபோது 4 நாட்கள் பெங்களூரு அம்ருதா வீட்டில் இருந்தேன்.

அப்போது எங்கள் தந்தையின் உறவினர்களான ரஜினிநாத், லலிதா ஆகியோரை அம்ருதாவிற்கு அறிமுகம் செய்து வைத்தேன். ரஜினிநாத்தின் மகள் அமெரிக்காவில் இருக்கிறார். அவர் வீட்டுக்கு அம்ருதா சென்று வந்தார். தற்போது அவர்கள் இருவரும் அம்ருதாவை ஜெயலலிதாவின் மகள் என சொல்லி இருக்கிறார்கள். இது தவறான தகவல் என்று வாசுதேவன் கூறினார்.

மேலும், ஜெயலலிதாவுக்கு பிரசவம் பார்த்தது, லலிதாவின் பெரியம்மா என்று கூறுவது தவறான தகவல் என்றும் ஜெயலலிதா எங்கள் குடும்ப உறுப்பினர்கள் யாரோடும் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை என்றும் கூறினார்.

நான் சென்னை வரும்போது, நம்பியார், சிவாஜி, நடிகை ராஜ சுரோக்சனா உள்ளிட்ட பலரை சந்திப்பேன். அப்போது அவர்கள் என்னிடம் ஜெயலலிதாவுக்கும் ஷோபன் பாபுவுக்கும் ஐதராபாத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்ததாக சொல்லி இருக்கிறார்கள். பிறகு, அந்த பெண் பாரினில் திருமணம் செய்து கொடுத்துள்ளதாக கேள்விப்பட்டேன்.

ஆனால், அனைத்து உண்மைகளும், சசிகலா-நடராஜனுக்கு நிச்சயம் தெரியும். அவர்கள் தமிழக மக்களுக்கும் ஜெயலலிதாவின் உறவினர்களாகிய எங்களுக்கும் சொல்ல வேண்டும் என்று வாசுதேவன் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!