விபத்துகளை தடுக்க புதிய யுக்தியை கையில் எடுத்த போலீசார்...!

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரம் மாவட்டத்தில் விபத்துகளை தடுக்க மாவட்ட எஸ்பி மிளிரும் விளக்குகளை அமைத்துள்ளார்.

The new strategy to prevent accidents in the hands of the police ...!

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரம் மாவட்டத்தில் விபத்துகளை தடுக்க மாவட்ட எஸ்பி மிளிரும் விளக்குகளை அமைத்துள்ளார்.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், தாம்பரம் ஜிஎஸ்டி சாலை முதல் வழி நெடுகிலும் தினமும் ஏராளமான விபத்துகள் நடந்து வருகின்றன. இதில், உயிர் பலிகளும் அதிகரித்துள்ளன. இதனை தடுக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். The new strategy to prevent accidents in the hands of the police ...!

Latest Videos

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி ராஜேந்திரன், அங்குள்ள சுங்கச்சாவடியில் மிளிரும் விளக்குகளை அமைத்து விபத்துகளை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

இதையொட்டி உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகில் மிளிரும் ஒளிவிளக்குகளை வைத்து விபத்துகளை தடுப்பதற்கான வழி வகையினை செய்துள்ளார். இதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துகளை தடுக்கவே இதுபோன்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

click me!