தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து... ஆம்னி பஸ் மோதி தொழிலாளி பலி!

By vinoth kumar  |  First Published Dec 12, 2018, 4:02 PM IST

டேங்கர் லரி மீது ஆம்னி பஸ் மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் கூலி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். 4 பேர் படுகாயமடைந்தனர்.


டேங்கர் லரி மீது ஆம்னி பஸ் மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் கூலி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். 4 பேர் படுகாயமடைந்தனர்.

தென்காசியில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் ஆம்னி பஸ் நேற்று இரவு சென்னைக்கு புறப்பட்டது. இன்று அதிகாலை 5.30 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த சாரம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது, பஸ்சின் முன்னால் டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை முந்தி செல்வதற்காக ஆம்னி பஸ் டிரைவர் முயன்றார். இதில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பஸ், தறிக்கெட்டு ஓடி ங்கர் லாரி மீது மோதியது. இதில் நிலைதடுமாறி டேங்கர் லாரியும், ஆம்னி பஸ்சும் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தன. 

Latest Videos

இதில் ஆம்னி பஸ்சில் பயணம் செய்த விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியை சேர்ந்த தொழிலாளி மாரிமுத்து (43) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது தாய் லட்சுமி (65), திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகே பெத்த நாடார்பட்டியை சேர்ந்த அன்பழகன் (33) உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர். 

தகவலறிந்து ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்தவர்களை சிகிச்சைக்காகவும், சடலத்தை பிரேத பரிசோனைக்காகவும் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கிடையில், பொக்லைன் இயந்திரம் கொண்டு வரப்பட்டு, தேசிய நெடுஞ்சாலையோர பள்ளத்தில் விழுந்த லாரி மற்றும் ஆம்னி பஸ்சை மீட்கும் பணி நடந்து வருகிறது. மேலும் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

click me!