விழுப்புரம் அருகே இன்று அதிகாலை தடுப்பு சுவர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர்.
விழுப்புரம் அருகே இன்று காலை தடுப்பு சுவர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தேவநாதன் இவர், கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையத்தில் சுற்றுசூழல் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மனைவி மாலினி(45), மகள் ரம்யா(26) ஆகியோருடன் காரில் சேலம் செல்ல முடிவு செய்தார். இன்று அதிகாலை ஒரு மாருதி காரில் தேவநாதன் தனது குடும்பத்தினருடன் சேலம் புறப்பட்டு சென்றனர்.
இந்த காரை ஓட்டுநர் பாபு என்பவர் ஓட்டினார். இன்று காலை கார் விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் ரயில்வே கேட் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது. திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்தது. சாலையில் தாறுமாறாக ஓடி அங்குள்ள தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். பின்னர் விபத்தில் இறந்த 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.