கேரளத்தை ஆட்டிப்படைக்கும் புது வரவான “நிபா வைரஸ்” அறிகுறிகள் எப்படி இருக்கும்? எங்கே தோன்றியது?

First Published May 21, 2018, 4:09 PM IST
Highlights
The new arrival of Kerala is Nipa Virus


கேரளத்தை ஆட்டிப்படைக்கும் “நிபா வைரஸ்”அட்டாக் எப்படி இருக்கும்?  அறிகுறிகள்? எங்கே தோன்றியது? பறவைக் காச்சல், பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்சல் ஆகியவை கேரளத்தில் தான் தொடங்குகின்றன. அந்த வகையில் புது வரவான “நிபா வைரஸ்” பத்துப்பேரை கொன்று கேரளத்தை ஆட்டிப்படைக்கிறது.

கேரளாவில் இந்த நிபா வைரஸ் வேகமாகப் பரவி வருவதாகவும், இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி பெரம்பரா, மலப்புரம் மற்றும் கோழிகோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 15 பேர் இதுவரை உயிரிழந்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பலியானோரின் எண்ணிக்கையில் ஒரு செவிலியரும் அடக்கம். நிபா வைரசால் தாக்கப்பட்ட 4 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்த செவிலியரும் இதே வைரசால் தாக்கப்பட்டு நேற்று பலியாகியுள்ளார்.

நிபா வைரஸ்-க்கு அடுத்தடுத்து உயிர்களைப் பறிகொடுத்து வரும் நிலையில், கேரளா சுகாதாரத்துறை தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கேரளா முழுவதும் ஆங்காங்கே மருத்துவ முகாம்களை அமைத்து பொதுமக்கள் அனைவரையும் பரிசோதித்து வருகின்றனர்.

நிபா வைரஸ் நோய் ஏற்படும் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அந்த நபருக்குச் சிகிச்சையை தொடங்குகின்றனர். எனவே யாரும் அச்சமடைய வேண்டாம் என்று கேரளா அரசு தெரிவித்துள்ளது. நிபா வைரஸ் குறித்து எந்த வதந்திகளையும் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் கேரளா அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

நிபா வைரஸ் பூதாகரமாக மாறிவரும் நிலையில் இந்த வைரஸ் எங்கு எப்படி கண்டறியப்பட்டது? இதன் அறிகுறிகள் எப்படி இருக்கும்?

வௌவால்களிடமிருந்து விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் நிபா வைரஸ் பரவுகிறது.

இந்த வைரஸ் தாக்கிய  விலங்குகள் மற்றும் பறவைகளிடமிருந்தும் மனிதர்களுக்கு பரவுவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
வௌவால் கடித்த பழங்களைச் சாப்பிடக் கூடாது எனவும், மாம்பழங்களை நன்கு கழுவிய பிறகே சாப்பிட வேண்டும்.
லேசான காய்ச்சலுடன் இதன் அறிகுறிகள் தொடங்குகிறது.

 

பிறகு, மூச்சுவிடுவதில் சிரமம், கடின தலைவலி ஏற்பட்டு அது மூளைக் காய்ச்சலாக மாறுகிறது.
இந்த வைரஸ் தாக்கினால், 75 சதவிகிதம் இறப்பு உறுதி.  

நிபா அட்டாக் எப்படி இருக்கும்?

வவ்வால், பன்றி மற்றும் ஆந்தை போன்ற விளங்குகளில் சிறுநீர், மலம், எச்சில் ஆகியவற்றில் நிபா வைரஸ் இருக்கும். இந்த விளங்களின் சிறுநீர் அல்லது எச்சில் போன்றவை மனிதர்களின் குடிநீர், உணவுப் பொருட்களில் கலந்திருந்தால் நோய் தாக்கும் அபாயம் ஏற்படும். சில நேரங்களில் நிபா வைரஸ் மனிதர்கள் வாழு பகுதியில் நிறைந்திருந்தாலும் மக்களுக்கு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. நாம் தினமும் அணியும் ஆடை, செருப்புகள் மற்றும் வாகனங்கள் உட்பட அன்றாட உபகரணங்களில் கூட இந்த வைரஸ் மறைந்திருக்கலாம்.

டெங்கு, ஸ்வைன் ஃப்லூ போன்று இந்த நிபா வைரஸ் வேகமாகப் பரவி உயிர்க்கொல்லி நோயை உண்டாக்கும். விளங்குகள் மூலம் மனிதர்களுக்குப் பரவும் இந்த வைரஸ் பின் நாட்களில் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மற்றவர்களுக்குப் பரவும். இதனால் காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் நிலை ஏற்படும்.

நிபா வைரஸ் வரலாறு

1998 ஆம் ஆண்டு மலேஷியாவை தாக்கிய நிபா வைரஸ், பெட்ரோபோடிடேவகையை சேர்ந்த வெளவால்கள் மூலம் இந்த நோய் விலங்களுக்கு பரவுகிறது.  1998 ஆம் ஆண்டு கம்பங் சுங்காய் நிப்பா( Kampung Sungai Nipah) என்ற கிரமாத்தில் இந்த நோய் வெளவால்களால் பன்றிகளுக்கு பரவியது.

இங்கிருந்த வெளவால்கள் அங்குள்ள ஒரு பழத்தை தின்று வெளியேற்றிய எச்சத்தை பன்றிகள் உட்கொண்டபோது நிபா வைரஸ் தாக்கியது. மலேசியாவில் முதன் முதலாக இந்த வைரஸ் தாக்கி உயிரிழந்த நபரின் பெயரையே இந்த வைரசுக்குச் சூட்டியுள்ளனர். இதன் மூலம் இதனை “நிபா வைரஸ்” என்று அழைக்கின்றனர்.

click me!