கோலமாவு கோகிலா தெரியும்? 'கோலா' மீன் கோகிலா தெரியுமா?

First Published May 21, 2018, 3:19 PM IST
Highlights
sunflower kolam with fish


நம் வீட்டு வாசல்களில் அரிசி மாவு அல்லது கோல பொடிகளைக் கொண்டு கோலமிடுவது வழக்கம். பண்டிகைககாலங்களின்போது அனைவர் வீட்டு
வாசல்களிலும் வரவேற்பது கோலம்தான். வருடத்தின் அனைத்து மாதங்களிலும் கோலம் வரையப்பட்டு வந்தாலும், மார்கழி மற்றும் தை மாதங்களில்
வரையப்படும் கோலங்கள் நம் கண்ணை கவரும் விதமாக இருக்கின்றன.

அவரவர்களின் கற்பனைத் திறத்திற்கேற்ப வரையப்படும் கோலங்களில் பறவைகள், விலங்குகள், பூக்கள் என பல்வேறு வடிவங்கள் இருக்கும்.

கோலங்கள் வரையும் முறையை கம்பிக்கோலம் என்றும் புள்ளிக் கோலம் என்றும் பிரிக்கின்றன. அதிலும் நேர்ப்புள்ளி, ஊடு புள்ளி என்று பல்வேறு வடிவங்களில் கோலங்கள் வரையப்பட்டு வருகின்றன.

இதுபோன்று பல்வேறு கோலங்களைப் பார்த்து பரவசப்பட்ட நமக்கு, மீன்களைக் கொண்டு கோலம் போடப்பட்டுள்ளது நமக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

நாகையைச் சேர்ந்த மீனவ பெண் ஒருவர் மீன்களைக் கொண்டு கோலம் வரைந்துள்ளார். 

இறால், கோலா மீன், சிறிய மீன்கள், பெரிய மீன்கள் என ஏராளமான மீன்களைக் கொண்டு கோலமிட்டுள்ளார். சூரியகாந்தி பூ போன்றும், நட்சத்திர வடிவில் பூ போன்றும் விதவிதமாக கோலமிட்டுள்ளார்.

தூரத்தில் இதனைப் பார்க்கும் நாம் கண்டிப்பாக இது கோலம் என்றே எண்ணுவோம். அருகே சென்றால்தான், அவை மீன்களால் கோலமிடப்பட்டுள்ளது தெரியவரும்.

click me!