
தேனாம்பேட்டை சத்தியமூர்த்தி நகரில் குமரேசன் தரப்புக்கும் சவுண்ட் சர்வீஸ் நடத்தி வந்த மதன் தரப்புக்கும் இடையே யார் தாதா..? என்பதில் போட்டி எப்போதும் உண்டு. மதனு மயிலாப்பூர் வட்ட சிம்பு ரசிகர் மன்ற தலைவராக இருந்தார்.
நண்பர் மார்ட்டினின் திருமணத்துக்கு மதனும், அவரது நண்பர் தீபக்கும் சேர்ந்து, வல்லவன் ஃப்ரண்ட்ஸ் & பிரதர்ஸ் என்ற பெயரில் வாழ்த்து பேனர் வைத்தனர். அந்த ஏரியாவில், குறிப்பிட்ட கட்சி மற்றும் சாதித்தலைவர் பேனர்களை மட்டுமே வைக்க வேண்டும் என்பது வழக்கத்தில் இருந்தது. இதனால், குமரேசன் தரப்பினர் மதனை அணுகி பேனரை எடுக்கச் சொன்னார்கள்.
இதற்கு மறுப்பு தெரிவித்த மதன், அவர்களை கெட்ட வார்த்தைகளால் திட்டியிருக்கிறார். இதனால், ஆத்திரமான குமரேசனும், அவருடைய நண்பர்கள் செல்வமணி, சீமான், தீனா, அஜித், குமரகுரு ஆகியோரும் மதனையும் தீபக்கையும் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டினார்கள். இந்த தாக்குதலில் மதன் பலியானார். காயங்களுடன் தப்பித்த தீபக் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இறந்த தன் ரசிகருக்காக சிம்பு போஸ்டர் ஒட்டினார். மேலும் ரசிகர் இனி எனக்கு கட் அவுட்கள் எனக்கு வைக்கவேண்டாம் என்றும் கூறியுள்ளார். உயிரைப் பறிக்கும் கட் அவுட்கள் தனக்கு தேவையில்லை எனத் தெரிவித்துள்ளார்.