
விருதுநகர்
விருதுநகரில் போலி பத்திரம் தயாரித்து நிலத்தை மோசடி செய்துவிற்ற நால்வர் மீது காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் கக்கன்காலனியைச் சேர்ந்தவர் பிச்சைக்கனி (48). இவருக்கு சொந்தமான காலி இடம் திருத்தங்கலில் இருந்தது.
இந்த நிலையிதிருத்தங்கல் வடக்குத்தெருவைச் சேர்ந்த ஆறுமுகச்சாமி (55) என்பவர் 1994 - 1995-ஆம் ஆண்டில் பிச்சைக்கனியின் நிலத்திற்கு போலியாக பத்திரம் தயாரித்து, திருத்தங்கல் பெருமாள்நகரைச் சேர்ந்த மாரிமுத்து மகன் ராசுதேவருக்கு (65) விற்றுவிட்டார்.
இதற்கு உடைந்தையாக ராசுதேவர் மனைவி பாப்பா மற்றும் ஜி.கே.ராஜன் ஆகியோர் இருந்துள்ளனர்.
இது குறித்து பிச்சைக்கனி சிவகாசி நீதித்துறை நடுவர் மன்றத்தில், வழக்குத் தொடர்ந்தார்.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்பேரில் திருத்தங்கல் காவலாளர்கள் ராசுதேவர், ஆறுமுகச்சாமி, பாப்பா, ராஜன் ஆகிய நால்வர் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.