திருமணத்திற்கு சென்றுவிட்டு திரும்பும்போது கார் மோதி இளைஞர் சாவு; சோகத்தில் மூழ்கிய கிராமம்...

 
Published : May 21, 2018, 09:45 AM ISTUpdated : Sep 19, 2018, 02:23 AM IST
திருமணத்திற்கு சென்றுவிட்டு திரும்பும்போது கார் மோதி இளைஞர் சாவு; சோகத்தில் மூழ்கிய கிராமம்...

சுருக்கம்

car hits youth died while returning from marriage festival

விருதுநகர்

விருதுநகரில், திருமண விழாவுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது கார் மோதி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி  அருகே உள்ள வீரசெல்லையாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (21). இவர் அருப்புக்கோட்டை அருகே உள்ள நரிக்குடியில் உறவினர் வீட்டுத் திருமண விழாவில் நேற்று காலை கலந்து கொண்டார்.

பின்னர், நரிக்குடியிலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் விருதுநகர் சாலையில் நேற்று மாலை சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரில் வந்த கார் திடிரென இவரது மோட்டார் சைக்கிளின் மீது வேகமாக மோதியது. இதில் சரவணக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அருப்புக்கோட்டை நகர் காவலாளர்கல் வழக்குப் பதிந்தனர். பின்னர், கார் ஓட்டுநரான பெரிய புளியம்பட்டியைச் சேர்ந்த ராஜா என்பவரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

திருமண விழாவுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது கார் மோதி இளைஞர் இறந்த சம்பவம் அவரது உறவினர்கள்  மற்றும் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!
தொடர் விடுமுறை.. சென்னை டூ மதுரை ரூ.4,000 கட்டணம்.. விமானத்துக்கு டஃப் கொடுக்கும் ஆம்னி பேருந்துகள்!