3 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கப்போகுது.. மக்களே உஷார் !

By Raghupati R  |  First Published Jul 17, 2022, 2:49 PM IST

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை தொடரும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.


நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 17 செமீ மழை பதிவாகியுள்ளது. மேல்பவானியில் 10 செமீ, நடுவட்டத்தில் 9 செமீ, கோவை மாவட்டம் சின்னக்கல்லார் பகுதியில் 7 செமீ மழையும் பதிவாகியுள்ளது.

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணையில் மடமடவென நீர்மட்டம் உயர்ந்தது. இந்நிலையில் மேட்டூர் அணையில் 1.28 லட்சம் கனஅடிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனையடுத்து 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய  எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு கனமழை வரும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு..இது ஆன்மீக ஆட்சியா? திராவிட மாடல் ஆட்சியா ? கடுப்பான தர்மபுரி எம்.பி - வைரல் வீடியோ!

வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 17.07.2022 முதல் 19.07.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் (மலைப்பகுதிகள்), தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

20.07.2022, 21.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது. 

மேலும் செய்திகளுக்கு..ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்.. ஸ்டாலின் சொன்ன வார்த்தை - கடுப்பான எடப்பாடி பழனிசாமி !

அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். 

கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.மத்திய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்’ என்று கூறியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..மம்தாவின் எதிரி டூ பாஜக வேட்பாளர் ; யார் இந்த ஜெகதீப் தங்கர் ? முழு தகவல்கள் இதோ !

click me!